எனக்கு பிடித்த பாடல்




பாடல் வரிகள்
சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம்கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ.....


சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம்கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ...


வெற்றியைப்போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம்பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இழையும் புண்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணிப் பண்ணி திருந்திய பிறகுதான் நாகரீகம் பிறந்ததடி
தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பவளக்கொடி


உள்ளம் என்பது கவலைகள் நிறப்பும் குப்பைத்தொட்டியில்லை
உள்ளம் என்பது பூந்தோட்டியானால் நாளை துன்பமில்லை
புயல் மையம்கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ....


ஆதியில் ஆண்டவன் இந்த பூமியைப்படைத்தானே
அவன் ஆசையைப்போலவே இந்த பூமி அமையலையே
ஆண்டவன் ஆசையே இங்கே பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மையென்றும் தீமையென்றும் 
நான்குபோர்கள் சொல்லுவது நம்முடைய பிழையில்லையே


துன்பம் என்ற சிற்பிக்குள்தான் இன்ப என்ற முத்து வரும்
துணிந்தபின் பயமில்லையே
கண்ணீர்துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்
காலுக்கு செருப்பு எப்படிவந்தது முள்ளுக்கு நன்றிசொல்
புயல் மையம்கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ...


சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம். 

எனக்கு பிடித்த பாடல்




பாடல் வரிகள்


ஏனோ  ஏனோ  பனித்துளி  பனித்துளி  என்  மேலே
தேனோ  பாலோ  எரியுது  எரியுது  தீ  போலே 
மேலும்  உள்ளம்  உருதுது  உருகுது  தன்னாலே
கண்கள்  பார்க்கும்  போதே 
நெஞ்சுக்குள்ளே  போனாய்  நீ  போனாய்
என்  நெஞ்சம்  என்ன  மெத்தை  தானா 
கூறாய்   நீ  கூறாய்
உன்னை  கூட்டி  கொண்டாயே 
வாராய்  வெளி  வராய் 
இனி  என்னை  விட்டு  எங்கும்
செல்ல  மாட்டாய்  
மாட்டாய் மாட்டாயே


மௌனம்  என்னும்  சாட்டை  வீசி  என்னை  தீராதே 
ஆலை  தென்றல்  பட்டால்  கூட  காயம்  ஆறாதே 
அக்கம்  பக்கம்  யாரும்  இல்லை  வா  என்  பக்கம் 
தேடல்  கொஞ்சம்  ஊடல்  கொஞ்சம்  நீ  யார்  பக்கம்
ஏதோ  ஒன்று  என்னை  தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே  சாய்ந்தேன் 
உன்னை  மட்டும்  எண்ணி  எண்ணி 
நிலவை  போலே  நீயில்லாமல்  தேய்ந்தேன் 


ஏனோ  ஏனோ  பனித்துளி  பனித்துளி  என்  மேலே 
தேனோ  பாலோ  எரியுது  எறியுது  தீ  போலே 
மேலும்  உள்ளம்  உருகிது  உருகிது  தன்னாலே
கண்கள்  பார்க்கும்  போதே  நெஞ்சுக்குள்ளே  …


நானும்  நீயும்  பேசும்  போது  தென்றல்  வந்ததே
பேசி  போட்ட  வார்த்தை எல்லாம் அள்ளிச்  சென்றதே 
சேலை  ஒன்றும்  ஆலை  ஒன்றும்  வாங்கி  வந்தாயா 
செய்தி  நல்ல  செய்தி  சொன்னால்  வேண்டாம்  என்பாயா 
ஓஹோ  ஓஹ்ஹோ ... 
திரும்பிய என்  பக்கம்  எல்லாம் 
நீ தான் நின்றாய் 
பாட்டை  போலே  தொட்டு  தொட்டு  தினசரி  வாழ்வில்
மாற்றம்  செய்தே  சென்றாய்



ஏனோ  ஏனோ  பனித்துளி  பனித்துளி  என்  மேலே
தேனோ  பாலோ  எரியுது  எரியுது  தீ  போலே 
மேலும்  உள்ளம்  உருகிது  உருகிது  தன்னாலே
கண்கள்  பார்க்கும்  போதே  நெஞ்சுக்குள்ளே ....

கண்ணதாசன் பாடல்-அச்சம் என்பது மடமையடா





அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் .. உடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா


கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன் ஆ...ஆ...ஆ.... ஆ...ஆ.........
கனக விசயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.


அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா


கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பான் தமிழன்னை ஆ...ஆ...ஆ....ஆ...ஆ.....
கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை


அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா


வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்


அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா


அஞ்சாமை திராவிடர் உடமையடா

காலம்




குருவிக்கூடு.

சிறகு முளைக்காத குருவிக்குஞ்சிகள் சிரித்து ஆரவாரித்தன.


மரத்தில் இருந்த அணில்,குருவிக்கூட்டுக்குத்தாவி,

“ உங்களுக்கு இன்னும் சிறகு முளைக்க வில்லை-சுதந்திரம் இல்லாத உங்களுக்கு என்ன சிரிப்பு?” என்று கேட்டது.

குஞ்சுகள் கவனிக்கவில்லை.


பாம்புக்கு இது வாய்ப்பானது.


குஞ்சிகளின் சிரிப்பொலி கேட்டு,பாம்பு கூட்டுக்குள்
நுழைந்தது.

நொடிப்பொழுதில்-

பாம்பின் வாயில் குஞ்சிகள் பலியாகிப் போயின்.


அணிலுக்கோ துயரம் தாங்கவில்லை.


அது மீண்டும் இரைந்து கத்தியது.
“சிறகு விரி

பிறகு சிரி

இத்தாலியன் உணவு வகைகள்-புகைப்படங்கள்

இத்தாலியன் உணவு வகைகள் மிகவும் சுவையானவை மட்டும் அல்ல,உலக அளவில் மிகவும் பிரசித்தமானவை,பீட்ஸா ,பாஸ்தா போன்றவை உலக அளவில் மக்கள் அனைவரும் விரும்பி உண்ணும் இத்தாலியன் உணவுகள்,இதனை விட பல்வேறு உணவு வகைகள் இங்கு உண்டு,அத்துடன் ஒலிவ் எண்ணை,வைன் என்பவற்றுக்கும் இத்தாலி புகழ் பெற்றது,இத்தாலியர்கள் உணவுகள் ஆரோக்கியமானவை,இவர்கள் அடிக்கடி க(f)பே,கபசீனோ எனும் கோப்பி வகையினை விரும்பி பருகுவார்கள்.

பாஸ்தா



பீட்ஸா



லசானியா


சலாட்


ரீசோத்தோ




பிரியோஸ்

கார்னே

புருசுத்தோ

பொர்மாச்சோ



கfபசீனோ


கfபே

எனக்கு பிடித்த பாடல்


பாடல் வரிகள்
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்


கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்


நீ நீ ஒரு நதி அலை ஆனாய்
நான் நான் அதில் விழும் இலை ஆனேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிளைத்திடுவேனோ
அலையினலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்
மனதிலே இருப்பதெல்லாம் மௌனத்திலே கலக்கும்


அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்


கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்


நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே
எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு


அன்பே என் அன்பே உன் விழி பார்க்க...
கனவே கனவே கண் உறங்காமல்....
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

உலகப் பழமொழிகள்-இத்தாலி





1.சிவந்த மை பூசிய பெண்கள் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்.

2.விரும்பியதைப் பெறமுடிவில்லையானால் பெற்றதையே விரும்புவோமாக.

3.மெதுவாக பேசுகிறவன் பத்திரமாகப் பேசுகிறான். தூரமாக போகிறான்.

4.முள் குத்தும் நெருஞ்சி விரைவில் வளர்ந்துவிடுகிறது.

5.புதைக்கப்பட்டுள்ள செல்வத்திற்கும், மூடி மறைக்கப்படுள்ள செல்வத்திற்கும், மூடி மறைக்கப்பட்டுள்ள அறிவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்பது எனக்குத் தெரியும்.

6.எடுத்துக்கொள்பவனுக்கு உலகம் சொந்தம்.

7.உலகம் எல்லாம் ஒரே தேசம்தான்.

8.உலகம் என்பது உயர்ந்த புத்தகம். எப்படிப் படிப்பது என்று தெரியாதவனுக்கு அது சிறிதே பயன்படுகிறது.

9.அதிர்ஷ்டம் என்பது ஒரு பசுமாடு. சிலருக்கு அது தனது முகத்தைக் காட்டுகிறது.
வறுமை அழகைச் சிதைக்காது.

10.அறிவுடைமை அழிந்து போவதில்லை. அறிவாளிகள் அழிந்து போகின்றனர்.


11.மெல்லிய ஆடைகளைப் பெட்டிகளில் வைத்திருப்பவர் முரட்டுப் போர்வையை உடுத்துகின்றனர்.

12.நூற்றில் ஓர் இளைஞர்தான் சபிக்கப்பட்டவர். இருபதில் ஓர் முதியவர்தான் ஆசீர்வதிக்கப்ட்டவர்.

13.உண்மைதான் அடிக்கடி தண்டிக்கப்படுகிறது .

14.வேலை செய்பவனுக்கு ஒரு சட்டை. வேலை செய்யாதவனுக்கு இரு சட்டைகள்.

15.சாபங்கள் ஊர்வலங்களைப்போல எங்கே தொடங்கியதே அங்கே முடியும்.

16.கடவுள் துணை இருந்தால் சிலந்தி வலையும் ஒரு சுவராகிறது கடவுள் கருணை இல்லாவிட்டால் சுவரும் சிலந்தை வலையாகிறது.

17.குழந்தை கேட்கும் ‘ஏன்?’ தான் தத்துவத்தின் சாவி.

18.சேவல் மௌனமாகவும் கோழி கூவும்படியாகவும் உள்ள வீடு துன்பகரமானது.

19.ஆன்மா இறைவனுக்குச் சொந்தம். உடம்பு மண்ணுக்குச் சொந்தம். சொத்து யாருக்குச் சொந்தம்?

20.ஒரு சிறிய உண்மை முழுப் பொய்யையும் நம்பச் செய்துவிடுகிறது.



21.மூடன் தன்னுடைய சொந்தச் செலவில் கற்றுக்கொள்கிறான். அறிஞன் மற்றவர்கள் செலவில் கற்கிறான்.

காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள்


சுவாமி விவேகானந்தர்: 
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய். 


வில்லியம் ஷேக்ஸ்பியர்:  
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்  
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள். 


அடால்ஃப் ஹிட்லர்: 
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. 


ஆலன் ஸ்டிரைக்:  
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள். 


அன்னை தெரசா: 
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.  


பான்னி ப்ளேயர்:
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
 
லியோ டால்ஸ்டாய்:
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. 


அப்ரஹாம் லிங்கன்:
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.  


ஐன்ஸ்டைன்: 
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.  


சார்லஸ்:
ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.

ஓரோப்பா அன்னை தேவாலயம்-புகைப்படங்கள்


இத்தாலியின் பியல்லா எனும் எழில் மிகுந்த நகரத்தில், அழகிய வானுயர்ந்த மலைகளும் அந்த மலைகளில் இருந்து உருவாகும் இயற்கை அருவிகளும் நிறைந்த இடத்தில் அமைந்துள்ள சக்திவாய்ந்த மாதா ஆலயம்.இது ஐரோப்பாவின் முக்கியமான சுற்றுலாத்தலம்.மாதாவின் உருவம் கறுப்பு நிறத்தில் அமைந்து இருக்கும் இதனால் கறுப்புமாதா என்றும் அழைக்கப்படும்.







































எனக்கு பிடித்த பாடல்


பாடல் வரிகள் 



விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் 
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம்
என் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே செந்தேனே


விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம்
என் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே செந்தேனே


கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானா எந்தன் கால் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் 
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் திரிந்திடுமே
ஒ ..ஒ ..ஒ ..
 
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம்
என் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே செந்தேனே
 
ஆசை என்னும் தூண்டில் முள் தான்
மீனை நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றி பறக்கும் நின்றால் நடந்தால்
நெஞ்சில் ஏதோ புது மயக்கம்
இது மாய வலை அல்லவா
புது மோக நிலை அல்லவா 
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை பிடிக்கும்
 
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம்
என் வாழ்வில் வருமா

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்



1.மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

2.பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி

3.மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்

4.விதியை நம்பி மதியை இழக்காதே.

5*மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.

6.மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.

7.பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.

8.பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.

9.பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.

10.தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்

11.கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

12.பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.

13.ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

14.ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.

15.ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

16.என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.

17.எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.

18.மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்



19.வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.

முகப்புத்தக விருப்பு