நிறைவு- காசி ஆனந்தன் கதைகள்

நகைக்கடைக் கண்ணாடிப் பெட்டியில் கண்ணைப் பறித்த இரத்தினக்கல்லைப்
பார்த்துத் தெருவில் கிடந்த குறுணிக்கல் பொறாமைப்பட்டது.

"எனக்கு ஏன் மதிப்பில்லை? நானும் ஓர் கல்தானே...." என்று ஓலமிட்டது.

தெருவோரத்தில் கிடந்த கடப்பாரை கூறியது.

'ஏ குறுணி! காலம் முழுவதும் உன்னை நீயே பெரிதாக எண்ணிக்கொண்டு
பலரும் பார்க்க தெருவில் கிடக்கிறாய். 

ஆனால், இரத்தினக்கல் அப்படியா! நிறைந்து வளர்ந்து இரத்தினமாகும் வரை 
வெளியே தலை காட்டியதே இல்லை. எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னைத்தானே
உருவாக்கிக் கொண்டு இருந்தது.

'அப்படியென்றால்...... ?'என்று இழுத்தது குறுணிக்கல்.

கடப்பாறை சொன்னது--

" நிறைவாகும் வரை
மறைவாக இரு"


ஆக்கம் -சாம் கஜன்
புத்தகம்-காசி ஆனந்தன் கதைகள்

முகப்புத்தக விருப்பு