இலங்கையின் இயற்கை அழகு

தென் ஆசியாவின் அழகிய தீவாக அமைந்துள்ள எமது நாட்டில் அழகோ தனி அழகிய வெண்மணல் படர்ந்த கடற்கரைகள் , குளங்கள் ,ஆறுகள் மலை பிரதேசங்கள் அவற்றில் இருந்து வரும் அழகிய நீர்வீழ்ச்சிகள் ,பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள் ,காடுகள் ,நீண்ட நெடுபனைகள் தென்னைகள் இது போன்ற இயற்கை அழகுகள் ஏராளம். இவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்-( பாடசாலை காலத்தில் சித்திரம் வரைவதில் மிகவும் பாராட்டுப்பெற்ற எனது பாடசாலை சக வகுப்புத்தோழன் சிவனேசன் சயிந்தன் தனது கமராவில் ரசனையுடன் பதிவு செய்து முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் இவை நன்றி-சயிந்தன் ).


1.அடர்காட்டிடையே அழகிய நீர்வீழ்ச்சி-ROMBODA WATERFALLS
2.குளக்கரையோர நிமிர்ந்த புற்கள்-சங்கரத்தை, வட்டுக்கோட்டை
3.பனைகளின் பூமி-யாழ்ப்பாணம்-JAFFNA
4.குளக்கரைவலை வீச்சு-செம்மணி -CHEMMANI
5.வயல் மேடையில் மேகக்கூட்ட நடனம் -வெலிகம -WELIGAMA
6.மலைகளில் நடுவில் மனித வசிப்பிடங்கள் -மலையகம்-HILL COUNTRY
7.திருக்கோணேச்சர கடலும் கரையும் -திருக்கோணமலை TRINCOMALEE-பட உதவி-Ratnanathan Ratnavasanthan
8.ஆற்றில் மேகக்கூட்ட குளியல்-நச்சடுவ குளம்-NACHCHADUWA TANK
9.வரட்சியில் செழுமை -செம்மணி -CHEMMANI
10.மழைக்கால வயல்வெளி-வட்டுகோட்டை யாழ்ப்பாணம்-VADDUKKOTTAI ,JAFFNA











வைரமுத்துவின் காதலித்துப்பார்



உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்

உலகம் அர்த்தப்படும்

ராத்திரியின் நீளம்
விளங்கும்

உனக்கும்
கவிதை வரும்

கையெழுத்து
அழகாகும்

தபால்காரன்
தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்

கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்

காதலித்துப் பார்

தலையணை நனைப்பாய்
மூன்றுமுறை பல்துலக்குவாய்

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்

வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்

காக்கைக்கூட உன்னை
கவனிக்காது
ஆனால் - இந்த உலகமே
உன்னையே கவனிப்பதாய்
உணர்வாய்

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்

இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கௌரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்

காதலித்துப்பார்

இருதயம் அடிக்கடி
இடம்மாறித் துடிக்கும்

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்

காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்

ஹார்மோன்கள்
நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்

தாகங்கள் சமுத்திரமாகும்
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்

காதலித்துப்பார்

பூக்களில் மோதி மோதியே
உடைந்து போக
உன்னால் முடியுமா?

அகிம்சையின் இம்சையை
அடைந்ததுண்டா

அழுகின்ற சுகம்
அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள்ளே
புதைக்கத் தெரியுமா?

சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னால் ஒண்ணுமா?

அத்வைதம்
அடைய வேண்டுமா?

ஐந்தங்குல இடைவெளியில்
அமிர்தம் இருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?

காதலித்துப்பார்

சின்னச்சின்னப் பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே

அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே

அதற்காகவேனும்

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே

அதற்காகவேனும்

வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே
வாழவும் முடியுமே

அதற்காகவேனும்

காதலித்துப்பார்

சம்பிரதாயம்
சட்டை பிடித்தாலும்
உறவுகள்
உயிர்பிழிந்தாலும்

விழித்துப் பார்க்கையில்
உன் தெருக்கள்
களவு போயிருந்தாலும்

ஒரே ஆணியில் இருவரும்
சிக்கனச் சிலுவையில்
அறையப்பட்டாலும்

நீ நேசிக்கும்
அவனோ அவளோ
உன்னை நேசிக்க மறந்தாலும்

காதலித்துப்பார்

சொர்க்கம் - நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்

காதலித்துப்பார்

கவிஞர் - கவிப்பேரரசு வைரமுத்து

கண்ணதாசன் பாடல்கள்



ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)

இறைவன்-கலீல்ஜிப்ரானின் கவிதை

முன்னொரு காலத்தில் 
பேச்சின் முதல் தீண்டலை 
என் உதடுகள் தரிசித்த போது 
நான் 
புனித மலையின் மேலேறி நின்று 
இறைவனிடம் சொன்னேன்.. 
"எசமானனே.. நான் உன் அடிமை.. 
உன் மறைந்த நினைப்பே எனக்கு ஆணை.. 
உன்னை நான் எப்போதும் பணிந்திருப்பேன்..!!" 
இறைவன் மறுமொழி ஏதும் கூறாமல் 
ஒரு பெரும் புயலைப் போல் 
என்னைக் கடந்து சென்றார்.. 

ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னர் 
நான் 
மீண்டும் புனித மலையில் ஏறி 
மீண்டும் இறைவனிடம் சொன்னேன்.. 
"படைத்தவனே.. நான் உன் படைப்பு.. 
களிமண் கொண்டு நீ என்னை உருவாக்கினாய்.. 
நான் உனக்கே உரிமையானவன்..!!" 
இறைவன் மறுமொழி கூறாமல் 
ஆயிரம் சிறகுகள் போல் 
கடந்து மறைந்தார்.. 

இன்னொரு ஆயிரம் ண்டுகள் கடந்ததும் 
புனித மலையில் ஏறி 
நான் மீண்டும் 
இறைவனிடம் சொன்னேன்.. 
"தந்தையே.. நான் உங்கள் மகன்.. 
கருணையினாலும் அன்பினாலும் 
நீங்கள் எனக்குப் பிறப்பளித்தீர்கள்.. 
பக்தியினாலும் வழிபாட்டினாலும் 
நான் உங்களை அடைவேன்..!!" 
இறைவன் மறுமொழி கூறாமல் 
மலைச்சாரல் பனிமூட்டம் போல் 
விலகி மறைந்தார்.. 

மீண்டும் ஆயிரம் ஆண்டுகள் கடந்ததும் 
மீண்டும் புனித மலையில் ஏறி 
நான் இறைவனிடம் சொன்னேன்.. 
"இறைவா.. 
நீயே என் நோக்கம்.. 
நீயே என் நிறைவு.. 
நான் உன்னுடைய நேற்று.. 
நீ என்னுடைய நாளை.. 
நான் பூவுலகில் உன்னுடைய வேர்.. 
நீ வானுலகில் என்னுடைய மலர்.. 
சூரியனின் முகத்தின் முன்னால் 
நாம் இருவரும் இணைந்து வளர்வோம்..!!" 

இறைவன் என்னை நோக்கிக் குனிந்து 
என் காதுகளில் இனிய சொற்களைக் கூறி 
தன்னை நோக்கி வரும் நதியை 
கடல் ஆரத் தழுவிக் கொள்வது போல் 
என்னை அரவணைத்து எடுத்துக் கொண்டார்.. 

மலையிலிருந்து 
நான் கீழே இறங்கி வந்த போது 
இறைவன் எங்கும் நீக்கமற 
நிறைந்திருந்தார்..

முகப்புத்தக விருப்பு