குருவிக்கூடு.
சிறகு முளைக்காத குருவிக்குஞ்சிகள் சிரித்து ஆரவாரித்தன.
மரத்தில் இருந்த அணில்,குருவிக்கூட்டுக்குத்
“ உங்களுக்கு இன்னும் சிறகு முளைக்க வில்லை-சுதந்திரம் இல்லாத உங்களுக்கு என்ன சிரிப்பு?” என்று கேட்டது.
குஞ்சுகள் கவனிக்கவில்லை.
பாம்புக்கு இது வாய்ப்பானது.
குஞ்சிகளின் சிரிப்பொலி கேட்டு,பாம்பு கூட்டுக்குள்
நுழைந்தது.
நொடிப்பொழுதில்-
பாம்பின் வாயில் குஞ்சிகள் பலியாகிப் போயின்.
அணிலுக்கோ துயரம் தாங்கவில்லை.
அது மீண்டும் இரைந்து கத்தியது.
“சிறகு விரி
பிறகு சிரி”