உறவு எனும் இனிய உணர்வு




காமம் கடந்து காதலில் வளர்ந்து
உருவாகும்; உறவில்
ஆழம் உண்டு. அன்பு உண்டு.
புரிந்துகொள்ளல் உண்டு. முதிர்ச்சி உண்டு.
தன்னம்பிக்கை இருக்கும் ஆனால் தன்முனைப்பு இருக்காது.
ஒருவருக்கு ஒருவர் தூணையாக இருப்பார்கள்
ஆனால்;. ஒருவரில் ஒருவர் தங்கியிருக்க மாட்டார்கள்.
குழந்தைகளைப் போல் விளையாட்டுத்தனம் இருக்கும்
வாலிபம் போல் வீம்பு இருக்காது.
போட்டியிருக்காது. பொறாமையிருக்காது.
மற்றவரை நோக்கிய மதிப்பு இருக்கும்.
காம புணர்வு கலவை இருக்கும் காம வெறி இருக்காது.
இவ்வாறான உறவில் உருவாகும் குழந்தை
உண்ணதமாகவும்  உயர்ந்ததாகவும் பிறக்கும்.

சாதாரணமாக நம் உறவுகள்
ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் உறவாக அமைகின்றது.
ஆனால் தங்கியுள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை.
இதற்கு எங்களது தன்முனைப்பு காரணம்.
இருவரும் அன்பில் வறுமையானவர்கள்.
இதைப் புரிந்தோ ஏற்றோ கொள்வதில்லை.
ஆனால் இருவரும் மற்றவரின் அன்பை பெறுவதற்காக
உறவாகி முயற்சிக்கின்றனர்.
இந்த உறவுகள் முரண்பாட்டில் முடிவடைகின்றன.
இருவரும்  திறந்நத (open) மனதுடன்  இருப்பது
தம்மை தாம் அறிவதற்கு மட்டுமல்ல
மற்றவரையும் அறிவதற்கு வழிவகுக்கின்றது.
ஆனால் நாம் திறந்த மனதுடன் இல்லை. காரணம் பயம்.
உண்மையாகவும் திறந்த மனதுடனும் இருப்பது
நம்மைப் பிரித்துவிடும் என பயப்பிடுகின்றோம்.
ஆகவே பொய்யாக வாழ்கின்றோம். நடிக்கின்றோம்.

ஒருவரைப் புரிந்து கொள்வது என்பது முடியாத காரியம்.
ஓவ்வொரு தனிமனிதரும் புரியாத ஒரு தொடர்ப்புதிர். ஒரு அதிசயம். புரிந்துகொண்டோம் எனக் கருதினால்
மற்றவரை ஒரு பொருளாக கருதி கொண்டோம்
அந்தளவிற்கு குறைத்துவிட்டோம் என்றே பொருள்படும்.
ஏனனில் பொருட்களை மட்டுமே நாம் புரிந்து அறிந்து கொள்ளமுடியும்.
நம் உறவுகளில் ஒரு பயம் எப்பொழுதும் குடிகொண்டுள்ளது.
காதலன் காதலிக்குப் பயம். காதலி காதலனுக்குப் பயம்.
இரு பயந்தவர்கள் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் உறவே நமது உறவுகள். சண்டை,சுரண்டல், பயன்படுத்தல், கட்டுப்படுத்தல், ஆதிக்கம் செய்தல், சொத்தாக நினைத்தல் என்ற நிலையிலையே நாம் ஒருவருடன் இணைந்து வாழ்கின்றோம்.

உண்மையான காதல்; உறவில் இருப்பவர்களுக்கு
இறப்பு என்பதே இல்லை.
காதல் இல்லாத உறவில்
ஒவ்வொரு கணமும் இறப்பு.

கணவன் மனைவி இருவரும் எப்பொழுதும் சண்டை
பிடித்துக் கொண்டும் குற்றம் குறை கூறிக்கொண்டும் இருப்பர்.
ஓன்று பிழைத்தால் எப்பொழுதும் மற்றவரை குறை கூறுகின்றோம்.
அவரே காரணம் ,பொறுப்பு என்கின்றோம்.
இது எதிர்கால வளர்ச்சிக்கான
எல்லா விதமான சாத்தியங்களையும் அழிக்கின்றது.
நானே எப்பொழுதும் எதற்கும் பொறுப்பாளர்.
நானே தவறுகள் அனைத்துக்கும் காரணம் என்பதை என்றும்
நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
நம்மை நாம் மாற்ற வேண்டும்.
பிரச்சனைகள் உருவாக்கும் தன்மைகளை
நம்மிலிருந்;து அகற்றவேண்டும்.
சுய மாற்றத்திற்கான வழியே காதல் உறவு.
இது மற்றவரில் பிழை கண்டுபிடிக்காது.
எங்கோ என்னில் பிழையிருக்கின்றது. எனக்கண்டுபிடிக்கும்.
இப் பிழையை அகற்றிவிட முயற்சிக்க வேண்டும்.
இது மிகவும் கஸ்டமான பாதை.
ஏனனில் நம் தன்முனைப்புக்கு எதிரானது.
நம் பெருமையை நோகப்பண்ணும்.
நாம் அதிகாரத்தில் இருக்கமாட்டோம்.
மற்றவரின் ஆதிக்கத்தை ஏற்ப்பதும் அதிகாரம் இல்லாதிருப்பதும்
மிகவும் கஸ்டமாக இருக்கும்.
நம் தன்முனைப்பை அழிக்கும்.
நம் நோக்கமே தன்முனைப்பை அழிப்பது தான்.
காதல் உறவினுடாக இலகுவாக இதை அடையலாம்.
இது இயற்கையான பாதை.

இருவரின் சந்திப்பு திருமணத்தில் முடியக் கூடாது.
நட்புத்தன்மையில் தொடர்ந்தும் இருக்கவேண்டும்.
காதலில் இருக்கவேண்டும்.
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை
என்பது தொடர்பாக ஆழ்ந்த புரிதல் இருக்கவேண்டும்.
திருமணம் என்ற பந்தம் என்று மறைகின்றதோ
அன்று ஆணும் பெண்ணும் ஆரோக்கியமானவர்களாக உருவாவார்கள்.
கற்பனை செய்ய முடியாதளவு நீண்ட நாட்கள் ஒன்றாக வாழ்வார்கள்.
திருமணம் ஒருவரை ஒருவர் சிறைக் கைதியாக்குகின்றது.
ஏனனில் திருமணம் என்பது ஒரு பொறி.
அகப்பட்டால் வெளிவருவது மிகவும் கஸ்டமான விடயம்.
ஏனனில் திருமணம் ஒரு நிறுவனம்.
இதைப் பாதுகாப்பதற்கு மேலும் பல நிறுவனங்கள்
நம்மைச் சுற்றி காவல் காத்துக்கொண்டு இருக்கின்றன.
வாழ்க்கையை அலுப்பாக்கும் சீரழிக்கும் அமைப்பு முறை இது.
ஒரே மாதியரியான வாழ்வு மீண்டும் மீண்டும் வருகின்றது.

திருமணம் ஆண் பெண் இருவருக்கும் மட்டும் நடைபெறுவதல்ல
இன்பத்திற்கும் துன்பத்திற்க்குமான திருமணமாகும்.
தனியார் சொத்துரிமை ஒப்பந்தம் போன்றது திருமணம்.
இங்கு மனிதர்கள் சொத்து உரிமையாக உடமையாக கொள்ளப்படுகின்றனர்.
ஒரு உறவு காதலை அடிப்படையாக கொண்டு உருவாக வேண்டும்.
ஓப்பந்தங்கள் சட்டங்கள் அடிப்படையில் உருவாகக் கூடாது.
காதல் இருவருக்கு மட்டுமல்ல
எப்பொழுதாவது ஒருவருக்கே இல்லாமல் போகும் பொழுது
அன்புடன் நன்றியுடன் இருவரும் விடைபெற வேண்டும்.
நம் சமூகங்களில் இது சாத்தியமா?

உலகத்திலிருந்து காதல் மறைவதற்கு  திருமணம் வழி செய்துள்ளது.
ஏனனில் திருமணம் காதலுக்கா நடைபெறுவதல்ல
மாறாக பணம், நிதி,குடும்பம், பெருமை, சாஸ்திரம்,
இவ்வாறான முட்டாள் தனங்களுக்காகவும்
மற்றும் அதிகாரபூர்வ காமம் உறவுக்காகவுமே நடைபெறுகின்றது.
இரண்டு இதயங்களுக்கு இதில் ஒரு பங்குமில்லை.
அது கவனத்தில் எடுக்கப்படுவதுமில்லை.

உணர்ச்சிகளும் உணர்வுகளும்
அடக்கப்பட்ட அனைத்து சமூகங்களிலும்
காதல் சாத்தியமில்லை.
மிருக நிலை காமம் மட்டுமே சாத்தியம்.
காதல் நிலைக் காமம் கற்பனையில் மட்டுமே வாழும்.
ஒரே அலைவடிவத்தில் இயங்கும் இருவர் சந்திக்கும் சந்தர்ப்பம்
காதலில் மட்டுமே சாத்தியம்.
இவ்வாறான இருவர் சந்திப்பதற்கு காதலிப்பதற்கு
உறவில் இருப்பதற்கு இணைந்து வாழ்வதற்கு
நம் சமூகங்களிலிருந்து அதரவு கிடைப்பதில்லை.
உண்மையான காதலுக்கு இவர்களின் ஆதரவு
தேவையுமில்லை என்பது வேறுவிடயம்.
உண்மையான காதலர்களோ
ஒருவருக்கு ஒருவர் மதிப்பளித்து
நன்றி உடையவர்களாக இருப்பர்.
இவர்களுக்கு சக்தி அதிகம்.

உறவு என்பது அதியங்களில் (mystery) ஒன்று.
காரணம் இது இருவருக்கு இடையிலானது.
இருவரிலும் தங்கியுள்ளது.
இருவர் சந்திப்பது
இரு உலகங்கள் சந்திப்பது போன்றது.
எப்பொழுது எல்லாம் இருவர் சந்திக்கின்றனரோ
அப்பொழுது எல்லாம்
ஒரு புதிய உலகம் உருவாக்கப்படுகின்றது.
உறவை நாம் உருவாக்கின்றோம்.
பின் இதன் விளைவாக
உறவு நம்மை உருவாக்கின்றது.
இது மிகவும் சாதாரண விடயமல்ல.
மிகவும் சிக்கலானது. 
ஆரம்ப சந்திப்பு மேலோட்டமானது உடலளவிலானது.
இது நட்பை உறவை ஆரம்பிக்கின்றது.
இது நாளுக்கு நாள் நெருக்கமாகி ஆழமாகும் பொழுது
இருவரினதும் மையங்கள் சந்திக்க ஆரம்பிக்கின்றன.
அப்பொழுது காதல் பிறக்கின்றது.
மையங்கள் இணையும் பொழுது காதலில் உயர்கின்றனர்.
இருவர் ஒருவராகின்றனர். பிரிவு என்பது அர்த்தமற்றுப் போகின்றது.
இக் காதலே கடவுள் (godliness) தன்மையாகின்றது.
இப் புதிய தோற்றத்தலாம்
இருவரும் மாற்றமடைகின்றனர் (transform).
தம் நிலையில் உயர்கின்றனர்
என ஓசோ கூறுகின்றார்.

திருமணம்
ஒரு சாதாரண பேசும் வசனம்.
காதல்
ஒரு கவிதை

இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான உளவியளாளர் ஓசோ.  உறவுகள் தொடர்பான இவரது பார்வை மிக ஆழமானது, அழகானதும் கூட ..
0 Responses

முகப்புத்தக விருப்பு