இயற்பெயர்-சாம்பசிவம் கஜேந்திரதாஸ்.
கூப்பிடும்பெயர்-கஜன்.
சொந்தஊர்-திருகோணமலை,இலங்கை.
வசிக்கும்ஊர்பியல்லா,இத்தாலி.
புத்தகங்கள் வாசித்தலும்,
கவிதைகள் இரசித்தலும்,
புகைப்படங்கள் எடுத்தலும்,
உல்லாச பயணங்களும்,
பல்வேறு நாடுகளைப் பார்த்தலும் பிடிக்கும்.
கணணி சம்பந்தமான விடயங்கள் மிகவும் பிடிக்கும்.
நிறைய நண்பர்கள் இருக்கிறாரகள்...
இன்னும் நல்ல நண்பர்களை இணையமூடாக எதிர்பார்க்கிறேன்.
இணையமூடாக என்னை கவர்ந்த விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இது ஒரு சக்தி. வாழ்க்கைச் சக்தி. இயற்கையானது.
ஆனந்தமானது அனுபவிக்க. ஒரு பாவமும் அறியாதது.
ஒரு தவறும் இதில் இல்லை.
வாழ்க்கை இருப்பதும் வளர்வதும்
காமம் என்ற அடிப்படைச் சக்தியினால்.
நாம் காமத்தால் பிறந்தவர்கள்.
நம் ஒவ்வொரு அணுக்களிலும்
காமம் சக்தியாக உள்ளது.
இதை அறிந்தே ஓவ்வொரு சமூகமும் சமயமும்
இதைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளன.
தமது பிழைப்புக்காக.
இதற்கு எதிரான கருத்துக்களை நமக்குள் விதைத்து,
அடக்கப்பண்ணி குற்ற உணர்வை வளர்த்து
நம்மை நோயாளியாக்கி பின்
நோய்க்குச் சேவை என்ற பெயரில் பரிகாரமும் செய்கின்றன.
காமம்! நமக்குள் இயங்கும் இயற்கையின் மிகப் பெரிய சக்தி.
நம்மால் கட்டுப்படுத்த முடியாதது. நம் கட்டுப்பாடுகளையும் மீறி வெளிவருகின்றது. அடிபணிகின்றோம். அடுத்த கணம் குற்ற உணர்வால் வருந்துகின்றோம.; ஏன்?
காம சக்தியின் ஆற்றலை புரிந்து கொள்ளத்தவறியதால்
அச் சக்தியின் பலம் கண்டு பயந்து இதை வழிநடாத்த முடியாமல்
இதற்கு எதிரான கருத்துக்களையும் அடக்குவதற்கான வழிகளையும்
சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள்;; நம்முள் விதைத்துள்ளனர்.
இது எப்பொழுதும் காம சக்திக்கு எதிராக நம்மை சிந்திக்க செயற்படவைக்கின்றது. காரணம் நம் உள்மனதில் (subconsciousness) இவை ஆழமாக வேருண்டியுள்ளன. காமத்தைக் கண்டிப்பது தன்னைக் கண்டிப்பதற்கு சமம் என்கிறார் ஓசோ.
காம சக்தியை ஒழுங்கு முறையில் வழிநடத்தினால் சிறந்த பலன்களையும்
புதிய ஆற்றல்களையும் நமக்குள் வளர்த்திருக்கலாம்.
இதற்கான வழிகளை முன்னோர்கள் பலர் கண்டுபிடித்துள்ளனர்.
ஓசோ!
இந்த வழிகளையும் வழிகளை கண்டுபிடித்த வழிகாட்டிகளையும்
புதை குழிகளிலிருந்து மீட்டெடுத்து உயிர்ப்பித்து தூசிதட்டி
மீண்டும் நமக்கு வழங்கியுள்ளார். வழிகாட்டியுள்ளார்.
காமமின்றி நாமில்லை.
ஆனால் ஒரு உயிரை உருவாக்க மட்டுமே
நாம் பயன்படுத்துகின்றோம்.
இது மட்டப்படுத்தப்பட்ட பயன்பாடு மட்டுமே.
காம சக்திக்கு எதிரான ஆதிக்கம் இருந்த காலங்களில்
தம் சந்ததிகளை உருவாக்க மட்டுமே காமத்தைப் பயன்படுத்தினர்.
இதுவே மனிதருக்கு பழக்கமான வழக்கமான பணியாகிவிட்டது.
புதிய உயிர் உருவாவது காம சக்தியின் ஒரு பயன்பாடு மட்டுமே.
இதைவிட மனிதரின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கே பயன்படக்கூடியது
இக் காம சக்தி.
இதைப்பற்றி சிந்திக்க நேரம் ஏது?
காம கலவையை நம் சக்தியை இழப்பதற்கும் ஆறுதல் அடைவதற்கும்
உச்ச இன்பம் என்ன என்பதை அறியாமல் இயந்திரதனமாகப் பயன்படுத்துகின்றோம். உச்ச இன்பம் என்பது நாம் சக்தி மயமாக மாறுவது.
நமது தலையிலிருந்து கால் விரல் வரை அனைத்து இயங்கும் சக்தி நிலை.
சக்தி அலை வடிவங்களாக…உடலை உணராநிலை.
ஏன் நம்மால் உணர முடியவில்லை.
பிரக்ஞையற்றநிலை.
அவசரம். குற்ற உணர்வு.
எவ்வளவு விரைவாக முடிக்கலாமோ
அவ்வளவு விரைவாக முடிக்க நினைப்பது.
முடிந்தவுடன் விடுதலை பெற்ற உணர்வு.
ஆனால் இது தற்காலிக விடுதலை என்பதை மறந்துவிடுவது.
ஏனனில் மீண்டும் காமம் நம்மை இழுக்கும்.
பழையபடி…இவ்வாறு
ஒரு வட்டத்தில் இயங்குவதே நம் வாழ்வு.
காம செயற்பாட்டில் உடனடியாக
ஆணால் பங்குபற்ற முடியும்
என்பதால் ஆணுக்கு அவசரம்.
பெண்ணுக்கு நீண்ட நேரம் தேவை.
இதனால் நீண்ட காலமாக
பெண்கள் காமத்தின் இன்பத்தை அனுபவித்ததில்லை.
உச்ச இன்பம் (orgasm) ஆண்களுக்கு மட்டுமல்ல
பெண்களுக்கும் வரும் என்பது இயற்கைக்குப் பழசு.
மனித மன உலகுக்குப் புதுசு.
ஆணின் காம அலைவடிவம் செங்குத்தானது.
உடன் எழுந்து உடன் இறங்கும். மீண்டும் உடன் எழாது.
பெண்ணினது செங்குத்தானதல்ல.
நீண்டதும் படிப்படியாக உயர்ந்தும் செல்லும்
அலை வடிவம் கொண்டது மட்டுமல்ல
குறைந்தது ஒரே நேரத்தில் மூன்று தரத்திற்கு மேல் உயரக்கூடியது.
ஆகவே ஆணால் திருப்பதி செய்யமுடியாது.
காமத்தில் நாம் இன்பம் அனுபவிக்கும் கணம்
மூன்று முக்கிய விடயங்கள் நடைபெறுகின்றன.
நேரம், தன்முனைப்பு, இயற்கையாக இருப்பது.
நேரம் தெரியாது, மறந்து விடுவோம்.
தன்முனைப்பு இல்லாது இருக்கும்.
நான் என்பது இல்லா நிலை. இயற்கையாக இருப்போம்.
இயற்கையுடன் கலந்து பிரபஞ்சமாகவே மாறியிருப்போம்.
இந்த நிலையே தன்மையே உச்ச இன்பத்தை தருகின்றது.
இதைக் காம கலவையில் சிறிது நேரம் மட்டும் பெறுவதால்
நாம் சிற்றின்பம் எனக் கூறி குறைந்த மதிப்பை வழங்கிவிட்டோம்.
இந்த உச்ச இன்பத்தை ஒவ்வொரு கணமும் அனுபவிப்போரே
பேரின்பம் பெற்ற ஞானிகள் என ஆன்மீகத்தில் கூறுகின்றோம்.
இதை அறிந்து கொள்வதற்கு தடையாக இருப்பது
நமது பிரங்க்ஞையற்ற தன்மை.
அவசரமின்றி, ஆறுதலாகவும் குற்றவுணர்வின்றி, ஆனந்தமாகவும்
ஓவ்வொரு கணத்தை முழுமையாகவும் பிரங்க்ஞையுடனும்
காம கலவையில்; பங்குபற்றும் பொழுது
உச்ச இன்பம் என்ன என்பதை அறியலாம்.
சக்தி வெளியேற்றம் இல்லாது தொடர்ந்தும் அனுபவிக்கலாம்.
இது இன்பம் அனுபவிக்க மட்டுமல்ல
ஆனந்தமான வாழ்வுக்கு மட்டுமல்ல
மானுட விடுதலைக்கும் வழி காட்டும்.
இதுவே ஓசோ நமக்கு கற்பிக்கும் பாடம்.
இது உண்மையா இல்லையா என்று எவ்வாறு அறிவது.
ஓரே ஒர வழி தான் உண்டு. காம கலவையில்; ஈடுபடும் பொழுது பிரங்க்ஞையுடனும் முழுமையாகவும் செயற்படுவது மட்டுமே இதற்கு விடைதரும்.
ஏனனில் உண்மையான அறிவு
நமது அனுபவத்திலையே கிடைக்கின்றது.
காம கலவையில் உருவாகும் சிறிதுநேர பேரின்பத்தி லிருந்தே தியானம் கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் ஒசோ.
காம சக்தி இருபத்தியொரு வயது வரை
அதன் உச்ச நிலைக்கு இயற்கையாக உயர்ந்து சென்று
பின் கீழ் இறங்கி நாற்பத்தியிரண்டு வயதில்
இயற்கையாக காமம்; நம்மைவிட்டு அகன்றுவிட வேண்டும்.
இது ஓவ்வொரு வயதுக் காலகட்டத்தையும்
முழுமையாக அனுபவித்திருந்தால்
இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வு.
ஆனால் என்ன நடைபெறுகின்றது.
நாற்பது வயதில் நம்மை விட்டுச் செல்ல வேண்டிய காமம்
இறக்கப்போகும் என்பது வயதிலும்
நம் மனதை விட்டுச்செல்வதில்லை.
ஏன்?
அந்தந்த காலகட்டங்களில் அவற்றை அனுபவிக்காமல்
அச் சக்திகளை அடக்கி பிற விடயங்களுக்கு
கவனம் திசை திருப்பப்டுகின்றது.
இதற்கு தமது காம சக்தியை
வெளிக் காட்டுவதில் இருக்கும் பயமே காரணம்.
பொதுவாக ஆண்கள் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை
காமத்தை பற்றி சிந்திக்கின்றனர்.
பெண்கள் ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கு ஒரு முறை
காமத்தைப் பற்றிச் சிந்திக்கின்றனர்.
ஆகவே காமத்தை சரியான பாதையில் வழிநடத்துவதே
மனிதர்கள் மனச் சோர்வின்றி மன அழுத்தமின்றி
ஆனந்தமாக வாழ்வதற்கு சிறந்த வழி.
பிரம்மச்சாரியம் என்பது காம சக்தியை அடக்குவதல்ல.
இதை அடக்குவதால் மேலும் காமம் அதிகரித்து காமுகர்களாக உருவாகவே முடியும். இக் காம சக்தி மாற்றப்படக் கூடியது.
இவ்வாறு மாற்றுவதன் மூலம் காமம் நம்மிலிருந்து
மரங்களிலிருந்து பழுத்த பழங்கள் விழுவது போல்
காய்ந்த இலைகள் தானாக விழுவது போல் அகன்றுவிடும்.
இதன்போது காம சக்தி காதலாக பரிணாமமடைகின்றது.
சிற்றின்பம் என்ற காமத்திலிருந்து (sex)
காதல் (love) என்ற என்ற படிகளில் ஏறி
பேரின்பம் என்ற அன்புத்தன்மையை (compassion) அடையலாம்.
புடிகளில் ஏறுவோமா?
இன்று உலகம் எதிர்நோக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இந்த மனம் தான் காரணம் என்றால் மிகையல்ல. ஏனனில் மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பு. சிறைக்கூடம். இதில் புதிய எண்ணங்கள் மட்டும் கைதிகளல்ல. பழம் பெரும் கைதிகளும் இருக்கின்றன. சிலர் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். சிலர் தேவையானபோது மட்டும் வெளிவருவர். சிலர் வெளிவரும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். நம் மனதில் இவ்வளவு காலமும் இது இருந்ததா என. இந்த மனதிலிருந்தே உலகத்தில் உள்ள எழுத்துக்கள் சொற்கள் அதிலிருந்து வசனங்களும் எண்ணங்களும் சிந்தனைகளும் பிறந்தன. இவற்றின் பிறப்பில் ஒரு தவறும் இல்லை. இவை நம்மை வழிநடாத்த நாம் எருமை மாடுகள் போல் இயந்திரமாக இதன் பின் இயங்கிக்கொண்டிருப்பது தான் தவறு.
நமது பிரக்ஞையின் கட்டுப்பாட்டில் நம் மனம் இருக்கவேண்டும். மனம் சிறந்த சேவையாற்றும் உறுப்பு நுட்ப வேலைதிறன் கொண்டது. ஆனால் மிக மோசமான முதலாளி. நம் அனைவரினதும் இன்றைய முதலாளி நம் மனமே. மனதை நாம் சரியான வழியில் பயன்படுத்த தவறிவிட்டோம். நம் பிரக்ஞையின்றி நம் மனதிலிருந்து தான்தோன்றித்தனமான எண்ணங்களும் சிந்தனைகளும் வெளிவருவதற்கு நாம் காரணமாகிவிட்டோம். இன்று இவற்றை இல்லாது செய்வது பெரும் பணியாக உள்ளது. நம் மனம் எப்பொழுது தான்தோன்றித்தனமாக சிந்தனைகளை வெளிவிடுவதை நிறுத்தி நம் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றதோ அன்று நாம் சரியான பாதையில் செல்கின்றோம் என்பதை உத்தரவாதப்படுத்தலாம். நம் மனதை முதலாளி பதிவியிலிருந்து கீழ் இறக்கி நம் வேலையாளாக மாற்றிவிடுவோமானால்
நம் பிரச்சனைகளில் தொன்னூறுவீதம் இல்லாமல் போய்விடும் என ஓசோ கூறுகின்றார். ஏனனில் நமக்காகவே மனம் செயற்படவேண்டும். மனதிற்காக நாம் வாழவில்லை.
மனம் என்றால் என்ன எவ்வாறு இயங்குகின்றது என்ற ஆழ்ந்த புரிதலே நாம் மனதிலிருந்து விடுபட வழி வகுக்கும். மாறாக மனதுடன் சண்டையிடுதோ அல்லது அடக்குவதோ மனதை மேலும் பலப்படுத்தும்.
நம் பிரஞையற்ற தன்மை நமக்குள் கீழ் நோக்கி ஆழமாக வேருண்டியுள்ளது.
பிரக்ஞையின்மை (unconscious)
உபபிரக்ஞையின்மை (subunconscious)
கூட்டுப்பிரக்ஞையின்மை (Collective unconscious)
பிரபஞ்ச பிரஞையின்மை (Cosmic unconscious)
என நமக்குள் நம்மையறியாமலே பல இருக்கின்றன.
ஒவ்வொன்றாக இவற்றை நாம் அகற்றவேண்டும்.
இவை ஒவ்வொன்றும் நம் கடந்தகாலங்கள். நம்மால் அடக்கப்பட்டவை. ஒதுக்கப்பட்டவை. முடியாது தவிர்க்கப்பட்டவை என்று நிறையவிடயங்கள்
நம் ஆழ்மனதில் நம் பிரக்ஞையின்றி நமக்குள் வாழ்கின்றன. தேவையான நேரங்களில் இவைதான் நம்மை தவறாக வழிநடத்துகின்றன. சிலவேளைகளில் ஒரு செயலை செய்து முடித்தவுடன் ஏன் இப்படி செய்தோம் என பிரக்ஞையுடன் கவனிக்கும் பொழுது நமக்கு புரியலாம் பிரக்ஞையின்றி செயற்பட்டிருக்கின்றோம் என்பது.
காலம் கடந்து அதற்காக வருந்துவோம். இவ்வாறு வருந்துவதற்குப் பதிலாக ஒவ்வொரு கணமும் பிரக்ஞையுடன் செயற்படுவோமாயின் வாழ்வோமாயின் இந்த மனங்கள், ஆழ்மனங்கள் நம்மை ஆதிக்கம் செய்யமுடியாது.
மனதை பிரக்ஞையுடன் கவனிக்கும் பொழுது
சில விடயங்களை அவதானிக்கலாம்.
மனம் எப்பொழுதும் கடந்தகாலத்தில் அல்லது
எதிர்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்.
நிகழ்காலத்தில் ஒருபோதும் வாழாது.
இக் கணத்துடன் மனதிற்கு எந்தவிதமான உறவும் இல்லை.
இக் கணம் நாம் பிரக்ஞையுடன் இருப்போமாயின்
மனம் இருக்காது. இயங்காது.
மனதிற்கு நினைவுகளாக கடந்தகாலங்கள் தேவை.
மனதிற்கு கற்பனைகளாக எதிர்காலங்கள் தேவை.
கடந்த காலமும் இல்லாமல் எதிர்காலமும் இல்லாமல்
மனதிற்கு இருப்பே இல்லை. ஏனனில் இக் கணம் மிகவும் சிறியது.
இதில் மனதிற்கு ஒரு வேலையும் இல்லை.
உடலுடனான எங்கள் உறவு பற்றே (attachement) மனம்.
இது இன்னுமொரு பரிமாணம். இந்த உடலினுடாக உலகத்தில் வாழ்கின்றோம். ஆசைகள் கோவங்கள் காதல்கள் வெறுப்புக்கள் பொறாமைகள் எனப் பல விடயங்கள் மனதில் வாழ்கின்றன.
மனம் சிறந்த இரசாயன கணனி. சரியாகவும் நன்றாகவும் நாம் பயன்படுத்தினால் இதன் பலன் அதிகம். மனம் போன போக்கில் போகாமல் மனதை நாம் வழி நடாத்தவேண்டும். நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதற்கு வழி என்ன?
பிரங்க்ஞையுடன் மனதைக் கவனிப்பது.
நம் எண்ணங்களைக் கவனிப்பது.
அவற்றுடன் நம்மை அடையாளப்படுத்தாது கவனிப்பது.
இவற்றுடன் நம்மை அடையாளப்படுத்துவது என்பது
இதற்கு நாம் சக்தியை வழங்குகின்றோம் என்பதாகும்.
மாறாக இந்த எண்ணங்களுடன்
நாம் ஓத்துழைக்காமல் விடுவோமாயின்
அவற்றுக்கு வாழ்வு இல்லாது போய்விடும்.
நம் சக்தி தேவையற்று வீணடிக்கப்படாது.
இச் சக்தி நம் ஆரோக்கியமான
படைப்பாற்றலை நோக்கிச் செல்கின்றது.
ஒரு நிமிடம் எங்களால் நம் மனதைத் தொடர்ந்து,
அதனுடன் நம்மை அடையாளப்படுத்தாது
கவனிக்க முடியுமாயின்,
நாம் நம்முள் செல்வதற்கான
முதற்படியில் காலடி எடுத்து வைத்துள்ளோம்.
தொடர்ந்தும் கவனிப்போமாயின் எண்ணங்கள் இறந்துவிடும்.
நாம் மனதுக்கு அப்பால் (no-mind ) சென்றுவிடுகின்றோம்.
இது ஒரு தியான முறை.
நாம் மன அழுத்தங்களிலிருந்து விடுபட்டு
ஆனந்தமாக வாழ்வதற்கும் இது வழிசெய்கின்றது.
இலகுவான செய்முறை. ஆனால் கஸ்டமானது.
தொடர்ச்சியானதும் ஆழமான பயிற்சியும் தேவை.
சோக்கிரட்டீஸ் மனதை அதன் உச்சத்திற்கு முழுமையாகப் பயன்படுத்தினார்.
அதனால் தான் உண்மையை அறிவதற்காக தான் மரணிக்கும் சந்தர்ப்பத்தையும் தவறவிடவில்லை.
ஐன்ஸ்டைன் தன் பிரக்ஞையால் முக்கிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை கண்டறிந்தார். முக்கியமாக அணுச் சக்தியைக் கண்டு பிடித்தார். ஆனால் அவரது பிரக்ஞையற்ற மனதால் அணு குண்டைப் பயன்படுத்தி அழிவுக்கு வழிகாட்டினார். காலம் கடந்து அதற்காக அவரால் வருந்துவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை.
ஆகவே மனம் என்ற உறுப்பில் எந்த தவறும் இல்ல.
இதை எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதில் தான்
நம் வாழ்க்கை மட்டுமல்ல நாமும் உயர்கின்றோமா தாழ்கின்றோமா என தீர்மானிக்கப்படுகின்றது.
மனதை சரியான வழியில் பயன்படுத்தக்கூடிய
வழிநடாத்தக்கூடிய ஒரே சக்தி.
நம் பிரக்ஞை மட்டுமே
ஒரு புதிய குழந்தையை உருவாக்கும் மனிதர்கள் ஆணும் பெண்ணும் புணர்ச்சியில் ஈடுபடும் பொழுது எந்த நிலையில் இருக்கின்றனர் என்பது பிறக்கப்போகும் புதிய குழந்தையைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானது. நமது பாட்டன் பாட்டியோ அல்லது தாய் தந்தையோ அல்லது நாமோ அதாவது உலகில் வாழும்
பெரும்பாலான மனிதர்கள் ஒரு குழந்தையை உருவாக்குவதற்காக புணர்ச்சியில் ஈடுபடுவதில்லை. மாறாக தம் காம உணர்வினால் உந்தப்பட்டு காம மயக்கத்தில் பிரங்ஞையற்று புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர். இது பலநேரங்களில் புதிய உயிரை குழந்தையாக நமக்குத் தருகின்றது. நாம் புணர்ச்சியில் இருந்த நிலை இப் புதிய குழந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. தாயின் வயிற்றில் கரு இருக்கும் பொழுது மட்டுமல்ல கருவை உருவாக்கும் நேரத்திலும் நாம் என்ன நிலையில் நமது மனதில் இருக்கின்றோம் நமது நடவடிக்கைகள் என்பனவும் குழந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லன. ஆகவே பிறக்கும் குழந்தைகள் நம் காம உணர்வில் பிறக்காமல் இருப்பதற்கு நாம் பிரங்க்ஞையுடன் செயற்படவேண்டும். ஒரு புதிய குழந்தையை உருவாக்குகின்றோம் என்ற உணர்வில் நம் முழுமையான செயற்பாட்டில் ஒரு குழந்தையை உருவாக்குவது ஒரு தவம்.
ஒரு குழந்தைக்காக புணர்ச்சியில் ஈடுபடுவதற்கு முதலே
நாம் நமது காம உணர்வை ஒரளவாவது கடந்து இருக்க வேண்டும்.
குழந்தை உருவாக்கத்தில் பிரங்க்ஞை பூர்வமாக ஈடுபடவேண்டும்.
ஒரு குழந்தையை புதிய உயிரை உருவாக்கப் போகின்றோம் என்ற
பிரங்ஞை அதில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கவேண்டும்.
ஆகவே புதிய உயிரை உருவாக்கப்போகும் ஆணும் பெண்ணும்
புணர்ச்சிக்கு முதலே தம்மை தாயார் செய்யவேண்டும்.
கண்முடி அமைதியாக நம் மனம் இதயம் உடல் அணைத்தும்
ஒரே நோக்கத்தில் இருக்கும்மாறு முழுமையாக இருக்க வேண்டும்.
தனித் தனியாக இருவரும் தம்மை தயார் செய்தபின்பே
ஒருவரை ஒருவர் அணுகவேண்டும்.
இந்த அணுகலில் தொடுகையில் காமத்திற்குப் பதில்
அன்பு காதல் இருக்கவேண்டும்.
இவ்வாறு பிறக்கும் குழந்தைகளே
காதலில் அன்பில் பிறந்த குழந்தைகளாக இருக்கும்.
இது மட்டுமின்றி ஆரோக்கியமான
நம்மைவிட பிரங்க்ஞைபூர்வமான
புத்திக்கூர்மையான குழந்தைகளாக இருக்கும்.
அல்லது நம்மைப் போல காமத்தில் பிறந்த குழந்தைகளாகவே இருக்கும்.
காம சக்தியின் பயன்கள் பலவாயினும் நாம் குழந்தையை மட்டுமே இச் சக்தியைப் பயன்படுத்திப் பெறுகின்றோம். அதுவம் பிரங்க்ஞை இல்லாமல்.
பிறக்கும் குழந்தை நமக்கு சொந்தமா?
இல்லை எனகிறார் ஓசோ. நாம் ஒரு வழி மட்டுமே. நம் வழியில் நமக்குடாக ஒரு குழந்தை பிறக்கின்றது. அவ்வளவே. அதை பாதுகாத்து பாராமரிப்புது நம் பொறுப்பு. கடமையல்ல. ஆனால் குழந்தை பிறந்தவுடன் நாம் நம் குழந்தை என உரிமை கொண்டாடுகின்றோம். நம் குழந்தையே மற்றக் குழந்தைகளை விட உயர்வானது எனக் கருதுகின்றோம். இது குழந்தை மீது கொண்ட அன்பைவிட பற்று, உரிமையாலையே ஏற்படுகின்றது.
குழந்தைகளுக்கு கவனிப்பு முக்கியமானது. ஏனனில் இவர்கள் அழகான மலர்களாக மலர்வதற்கும் இந்த மலர்களின் நறுமணம் உலகத்தின் பிரபஞ்சத்தின் சூழலை சுத்தமாகவும் உயர்ந்ததாகவும் உருவாக்கும். ஓசோ மேலும் கூறுகிறார்
உங்கள் குழந்தைகளுக்கு அன்பை வழங்குங்கள் ஆனால் உங்கள் கருத்துக்களை அல்ல.
அவர்களை
ஒரு இந்துவாகவோ
ஒரு கிரிஸ்தவராகவோ
ஒரு இஸ்லாமியராகவோ
ஒரு பௌத்தராகவோ
ஒரு கம்யூனிஸ்டாகவோ
ஒரு பாஸிஸ்ட்டாகவோ உருவாக்காதீர்கள்.
இது அவர்களிடம் நச்சுத்தன்மையை உருவாக்கி
மிகவும் அழிவைத் தரும்.
அன்பையும் காதலையும் வழங்கி
அவர்கள் யார் என்று அறிவதற்கான ஆதரவை
பலத்தை சக்தியை வழங்குங்கள்.
யதார்த்தம் என்ன என்பதை புரியவையுங்கள்.
இது அவர்கள் வாழ்க்கையை
ஒரு சாகசம் நிறைந்த பயணமாக இருப்பதற்கு உதவி செய்யும்.
உண்மையான கல்வி
அவர்கள் அவர்களாக இருப்பதற்கு உதவுவதே.
இது வேறு எந்தவிதமான நோக்கங்களும் இல்லாமல்
அவர்களுடைய நன்மைக்காக
அவர்களுக்கு அன்பு செலுத்தினால் மட்டுமே சாத்தியம்.
வாழ்க்கையை ஒரு போராட்டமாக கற்பிக்காதீர்கள்
வாழ்க்கயை ஒரு கொண்டாட்டம் திருவிழாவாக கற்பியுங்கள்.
அறிமுகப்படுத்துங்கள். போட்டி மட்டுமே வாழ்க்கையல்ல.
உண்மையான கல்வி, குழந்தையின் இயல்பு என்ன
அதனுள் என்ன தகமைகள் திறமைகள் இருக்கின்றன
என்பதை கண்டுபித்து வழிநடாத்துவதே
பாதுகாப்பாளர்களின் பொறுப்பு.
நம்மால் நமக்குடாக பிறந்த குழந்தை என்பதற்காக
முழு உரிமையையும் நாம் எடுத்துக்கொள்கின்றோம்.
நம் வாழ்க்கையில் நம்மால் நிறைவேற்றமுடியாததை
சாதிக்க முடியாததை
நமக்கூடாக பிறந்த குழந்தை என்ற
ஒரு காரணத்திற்காகவே அதனுடாக
நம் கனவுகளை ஆசைகளை நிறைவேற்ற சாதிக்க முயற்சிக்கின்றோம்.
இதேபோல் நம் பெற்றோர்
நமக்கு செய்தபோது நாம் எதிர்த்தோம் சண்டையிட்டோம்
அல்லது பயத்தினால் விருப்பமின்றி சரணடைந்தோம்.
ஆனால் அதே தவறை நாம் இன்று தொடர்கின்றோம்.
இது எந்தவகையில் நியாயம்.
இச் செயற்பாடு மிகவும் மோசமான,
குழந்தைகள் மீதான வன்முறையாகும்.
அசிங்கமானது கொடூரமானது.
நமக்கு பிறக்கும் குழந்தை நாம் அல்ல!
அது ஆதுவே தனித்துவமானது (uniqueness)!
நம்மைப்போல முன்பும் இல்லை
இனியும் இல்லை ஆகவே மதியுங்கள்.
புரிந்துகொள்ளுவோம். ஓவ்வொரு குழந்தையும்;
தனித்துவமானவர்கள். (Individuals).
ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி இனி நீதான் எந்தன் அந்தாதி (நெஞ்சுக்குள்..)
ஏதோ ஒன்று என்னை ஈர்க்க மூக்கின் நுனி மர்மம் சேர்க்க கள்ளத்தனம் ஏதும் இல்லா புன்னகையோ மோகமில்லா
நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பார் என்னை பிடிக்கும்
இவள் யாரோ யாரோ தெரியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே இது பொய்யோ மெய்யோ தெரியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே போகாதே.. (நெஞ்சுக்குள்...) தூக்கங்களை தூக்கிச் சென்றாள் தூக்கி சென்றாள்.. ஏக்கங்களை தூவிச் சென்றாள் உன்னை தாண்டி போகும் போது போகும் போது.. வீசும் காற்றின் வீச்சிலேது நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே காதல் எனை கேட்கவில்லை கேட்டாலது காதல் இல்லை
என் ஜீவன் ஜீவன் நீதானே என தோன்றும் நேரம் இதுதானே நீ இல்லை இல்லை என்றாலே என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே (நெஞ்சுக்குள்..)