புதிய குழந்தை!!!


ஒரு புதிய குழந்தையை உருவாக்கும் மனிதர்கள் ஆணும் பெண்ணும் புணர்ச்சியில் ஈடுபடும் பொழுது எந்த நிலையில் இருக்கின்றனர் என்பது பிறக்கப்போகும் புதிய குழந்தையைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானது. நமது பாட்டன் பாட்டியோ அல்லது தாய் தந்தையோ அல்லது நாமோ அதாவது உலகில் வாழும்
பெரும்பாலான மனிதர்கள் ஒரு குழந்தையை உருவாக்குவதற்காக புணர்ச்சியில் ஈடுபடுவதில்லை. மாறாக தம் காம உணர்வினால் உந்தப்பட்டு காம மயக்கத்தில் பிரங்ஞையற்று புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர். இது பலநேரங்களில் புதிய உயிரை குழந்தையாக நமக்குத் தருகின்றது. நாம் புணர்ச்சியில் இருந்த நிலை இப் புதிய குழந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. தாயின் வயிற்றில் கரு இருக்கும் பொழுது மட்டுமல்ல கருவை உருவாக்கும் நேரத்திலும் நாம் என்ன நிலையில் நமது மனதில் இருக்கின்றோம் நமது நடவடிக்கைகள் என்பனவும் குழந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லன. ஆகவே பிறக்கும் குழந்தைகள் நம் காம உணர்வில் பிறக்காமல் இருப்பதற்கு நாம் பிரங்க்ஞையுடன் செயற்படவேண்டும். ஒரு புதிய குழந்தையை உருவாக்குகின்றோம் என்ற உணர்வில் நம் முழுமையான செயற்பாட்டில் ஒரு குழந்தையை உருவாக்குவது ஒரு தவம்.

ஒரு குழந்தைக்காக புணர்ச்சியில் ஈடுபடுவதற்கு முதலே
நாம் நமது காம உணர்வை ஒரளவாவது கடந்து இருக்க வேண்டும்.
குழந்தை உருவாக்கத்தில் பிரங்க்ஞை பூர்வமாக ஈடுபடவேண்டும்.
ஒரு குழந்தையை புதிய உயிரை உருவாக்கப் போகின்றோம் என்ற
பிரங்ஞை அதில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கவேண்டும்.
ஆகவே புதிய உயிரை உருவாக்கப்போகும் ஆணும் பெண்ணும்
புணர்ச்சிக்கு முதலே தம்மை தாயார் செய்யவேண்டும்.
கண்முடி அமைதியாக நம் மனம் இதயம் உடல் அணைத்தும்
ஒரே நோக்கத்தில் இருக்கும்மாறு முழுமையாக இருக்க வேண்டும்.
தனித் தனியாக இருவரும் தம்மை தயார் செய்தபின்பே
ஒருவரை ஒருவர் அணுகவேண்டும்.
இந்த அணுகலில் தொடுகையில் காமத்திற்குப் பதில்
அன்பு காதல் இருக்கவேண்டும்.
இவ்வாறு பிறக்கும் குழந்தைகளே
காதலில் அன்பில் பிறந்த குழந்தைகளாக இருக்கும்.
இது மட்டுமின்றி ஆரோக்கியமான
நம்மைவிட பிரங்க்ஞைபூர்வமான
புத்திக்கூர்மையான குழந்தைகளாக இருக்கும்.
அல்லது நம்மைப் போல காமத்தில் பிறந்த குழந்தைகளாகவே இருக்கும்.
காம சக்தியின் பயன்கள் பலவாயினும் நாம் குழந்தையை மட்டுமே இச் சக்தியைப் பயன்படுத்திப் பெறுகின்றோம். அதுவம் பிரங்க்ஞை இல்லாமல்.

பிறக்கும் குழந்தை நமக்கு சொந்தமா?
இல்லை எனகிறார் ஓசோ. நாம் ஒரு வழி மட்டுமே. நம் வழியில் நமக்குடாக ஒரு குழந்தை பிறக்கின்றது. அவ்வளவே. அதை பாதுகாத்து பாராமரிப்புது நம் பொறுப்பு. கடமையல்ல. ஆனால் குழந்தை பிறந்தவுடன் நாம் நம் குழந்தை என உரிமை கொண்டாடுகின்றோம். நம் குழந்தையே மற்றக் குழந்தைகளை விட உயர்வானது எனக் கருதுகின்றோம். இது குழந்தை மீது கொண்ட அன்பைவிட பற்று, உரிமையாலையே ஏற்படுகின்றது.

குழந்தைகளுக்கு கவனிப்பு முக்கியமானது. ஏனனில் இவர்கள் அழகான மலர்களாக மலர்வதற்கும் இந்த மலர்களின் நறுமணம் உலகத்தின் பிரபஞ்சத்தின் சூழலை சுத்தமாகவும் உயர்ந்ததாகவும் உருவாக்கும். ஓசோ மேலும் கூறுகிறார்
உங்கள் குழந்தைகளுக்கு அன்பை வழங்குங்கள் ஆனால் உங்கள் கருத்துக்களை அல்ல.
அவர்களை
ஒரு இந்துவாகவோ
ஒரு கிரிஸ்தவராகவோ
ஒரு இஸ்லாமியராகவோ
ஒரு பௌத்தராகவோ
ஒரு கம்யூனிஸ்டாகவோ
ஒரு பாஸிஸ்ட்டாகவோ உருவாக்காதீர்கள்.
இது அவர்களிடம் நச்சுத்தன்மையை உருவாக்கி
மிகவும் அழிவைத் தரும்.
அன்பையும் காதலையும் வழங்கி
அவர்கள் யார் என்று அறிவதற்கான ஆதரவை
பலத்தை சக்தியை வழங்குங்கள்.
யதார்த்தம் என்ன என்பதை புரியவையுங்கள்.
இது அவர்கள் வாழ்க்கையை
ஒரு சாகசம் நிறைந்த பயணமாக இருப்பதற்கு உதவி செய்யும்.
உண்மையான கல்வி
அவர்கள் அவர்களாக இருப்பதற்கு உதவுவதே.
இது வேறு எந்தவிதமான நோக்கங்களும் இல்லாமல்
அவர்களுடைய நன்மைக்காக
அவர்களுக்கு அன்பு செலுத்தினால் மட்டுமே சாத்தியம்.

வாழ்க்கையை ஒரு போராட்டமாக கற்பிக்காதீர்கள்
வாழ்க்கயை ஒரு கொண்டாட்டம் திருவிழாவாக கற்பியுங்கள்.
அறிமுகப்படுத்துங்கள். போட்டி மட்டுமே வாழ்க்கையல்ல.
உண்மையான கல்வி, குழந்தையின் இயல்பு என்ன
அதனுள் என்ன தகமைகள் திறமைகள் இருக்கின்றன
என்பதை கண்டுபித்து வழிநடாத்துவதே
பாதுகாப்பாளர்களின் பொறுப்பு.
நம்மால் நமக்குடாக பிறந்த குழந்தை என்பதற்காக
முழு உரிமையையும் நாம் எடுத்துக்கொள்கின்றோம்.
நம் வாழ்க்கையில் நம்மால் நிறைவேற்றமுடியாததை
சாதிக்க முடியாததை
நமக்கூடாக பிறந்த குழந்தை என்ற
ஒரு காரணத்திற்காகவே அதனுடாக
நம் கனவுகளை ஆசைகளை நிறைவேற்ற சாதிக்க முயற்சிக்கின்றோம்.
இதேபோல் நம் பெற்றோர்
நமக்கு செய்தபோது நாம் எதிர்த்தோம் சண்டையிட்டோம்
அல்லது பயத்தினால் விருப்பமின்றி சரணடைந்தோம்.
ஆனால் அதே தவறை நாம் இன்று தொடர்கின்றோம்.
இது எந்தவகையில் நியாயம்.
இச் செயற்பாடு மிகவும் மோசமான,
குழந்தைகள் மீதான வன்முறையாகும்.
அசிங்கமானது கொடூரமானது.

நமக்கு பிறக்கும் குழந்தை நாம் அல்ல!
அது ஆதுவே தனித்துவமானது (uniqueness)!
நம்மைப்போல முன்பும் இல்லை
இனியும் இல்லை ஆகவே மதியுங்கள்.
புரிந்துகொள்ளுவோம். ஓவ்வொரு குழந்தையும்;
தனித்துவமானவர்கள். (Individuals).

0 Responses

முகப்புத்தக விருப்பு