1.கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.-அப்ரஹாம் லிங்கன்
2.மகிழ்ச்சியினை எம்மில் காண்பது சுலபமானதல்ல. அத்துடன் அதனை வேறெங்காவது காண்பதும் சாத்தியமில்லை.
- அக்னஸ் றெப்லையர்
3.புதியனவற்றைப் பற்றிய பயம் மாற்றங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது.
- பிலிப் குறொஸ்பி
4.மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவம்.
- பேர்ள் எஸ். பக்
5.புறச்சூழல் எம்மை துன்பத்துக்குள்ளாக்குவதாக புலம்புகிறோம். உண்மையில் அது எமது தீர்மானம் மட்டுமே. அதிலிருந்து விடுபடக்கூடிய சக்தி எம்மிடம் உண்டு.
- மார்கஸ் அரேலியஸ்
6.எமது எல்லைகளை தெரிந்துகொண்டவுடன் எம்மில் ஆர்வம் காட்டுவதை குறைத்துக் கொள்கிறார்கள்.
- எமர்சன்
உன்னுடைய அனுமதி இன்றி எவரும் உன்னை இழிவு படுத்த முடியாது.
- எலனொர் றூஸ்வெல்ற்
7.எவ்வாறு எமது உள்ளத்தீயை அணையாமல் வைத்திருப்பது? இதற்கு குறைந்தது இரண்டு விடயங்கள் தேவைப்படும். ஒன்று : எம்மிடமுள்ள நல்ல குணங்கள், நாம் செய்த நல்ல விடயங்களை மெச்சிக்கொள்ளுதல். மற்றது : செயல்களை நிறைவேற்றி முடிக்கும் மனத்திடம்.
என்னுடைய வாழ்க்கையில் என்ன நல்ல விடயங்கள் உள்ளன?
நான் என்ன செய்ய வேண்டும்?
இவை ஒவ்வொரு நாளும் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகளாகும்.
- நதானியல் பிராண்டன்
8.கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தால் ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தைப் புகட்டும். ஒவ்வொரு பின்னடைவும் மாறு வேடத்திலுள்ள ஆசீர்வாதங்களே. பின்னடைவுகளும் தற்காலிகத் தோல்விகளும் இல்லாமல் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம்
- நெப்போலியன் ஹில்