சக்தி


அடிப்படையில் அனைத்தும் சக்தி மயம்.
நான், நீ, நாய், பூனை, புல், பூண்டு, மரம், ஏன் கற்பாறைகள், மலைகள் மட்டுமல்ல,
செயற்பாடுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், உணர்வுகள் என்பனவற்றுக்குமா?
அணுவுக்கும் சக்திதான் அடிப்படை.
ஒவ்வொன்றினதும் தோற்றப்பரிமாணங்களே வேறுவெறானவை.
நம் பார்வையின் பற்றாக்குறை. நம் கண்ணீனது வரையறுக்கப்பட்ட பார்வை, உண்மையான இயற்கையான தோற்றத்தைப் பார்ப்பதை தடுக்கின்றது.

அடிப்படைச் சக்தி கருக்களின், பருப்பொருட்களின் வேகங்கள்
ஒவ்வொரு பரிமாணங்களைத் தோற்றங்களைத் தீர்மானிக்கின்றன.
உதாரணமாக கல்லினது சக்திக் கருக்களின் வேகம் அதீ கூடியது.
இது நம் பார்வைப் புலனுக்கு அப்பாற்பட்டது. மனித உடலினது அணுக்ககளின் வேகமானது கல்லினதை விடக்குறைவானது. நேரத்தின் அளவைக் கொண்டு
இதன் வேகத்தைத் தீர்மானிக்கலாம். காரணம் நாட்கணக்கில் மனித உடலில்
ஏற்படும் மாற்றத்தைக் கவனிக்கலாம். நீரினது அணுக்களின் வேகம்
மனிதனினதை விடக் குறைவானது. இதனால் தான் நீர் ஓடுவதைப்
பார்க்கக் கூடியதாக இpருக்கின்றது.
அதாவது ஒரு பருப்பொருள் சக்தியாகவும் திண்மாகவும் மாறும் வேகம்
பொருளின் பரிமாணத்தை தீர்மானிக்கின்றது.
இந்த வேகத்தின் அளவை இன்றைய விஞ்ஞானம் கண்ட வேகத்தைவிட அதாவது இந் நிலை மாற்றம், வேகமானது என அன்றைய இந்திய,சீன ஞானிகள்
தம் மெய்ஞானத்தினால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனுபவத்தில் அறிந்துள்ளனர்.

இதற்கு காரணம் விஞ்ஞானம் வெளிப் பொருட்களைப் பிரித்துப் பிரித்து ஆய்வு செய்கின்றது. தர்க்கத்தின் அடிப்படையிலான அறிவு. மனமே இதன் எல்லை.
இவர்கள் இறுதியில் வந்தடைந்தது அணுச்சக்திகள் (quanta).
கண்டறிய முடியாததது இரண்டு அணுச்சக்திகளின் நிலைகளுக்கு
இடைப்பட்ட இடைவெளியை. ஆய்வு தொடர்கின்றது.

மெய்ஞானம்!
உள் நோக்கி செல்வது
முழுமையாக பார்ப்பது.
அனுபவத்தின் அடிப்படையிலான அறிவு.
அறிய முடியாததை அறிவது.
இல்லாததை அறிவது
நீர்த் துளியை அறிவது
நீர்த் துளியே சமுத்திரம் என அறிவது
சமுத்திரமே நீர்த் துளி என அறிவது
நீர்த்துளியாக இல்லாத நிலையையும் அறிவது
சக்தியானது தோற்றமற்றது உருவமற்றது
திண்மமில்லாதது ஒன்றுமில்லாததாக தோன்றுவது ஆனாலும் இருப்பது இதை அறிந்தது மெய்ஞானம்

உண்மையை அறிவது என்பது
விஞ்ஞானத்தால் பகுத்தறிவால் தர்க்கத்தால்
இதுவரை முடியாத காரியம்.
காரணம் பிரபஞ்சம் அப்படியிருக்கின்றது.
அறிந்தது (known)
அறியாதது (unknown)
அறியமுடியாதது (unknowable).
என பிரபஞ்ச இரகசியம் தொடர்கின்றது.
நேற்று அறியாதது (unknown)
இன்று அறிவோம் (known)
இன்று அறியாதது (unknown)
நாளை அறியலாம் (knowable)
ஆனால் எப்பொழுதுமே
அறிய முடியாதது (unknowable)
கண்டுபிடிக்க முடியாதது என்று
ஒன்று இருந்து கொண்டே இருக்கும்.
இது தான் பிரபஞ்ச இரகசியம்
நீர் ஒரு நிலை. சக்தியின் ஒரு வடிவம், தோற்றம். இது ஆவியாகும் பொழுது இன்னுமொரு நிலை. மீண்டும் கருமேகமாகி நீராகி,பனி மழையாகி பனிக் கட்டியாகி தன்வடிவத்தை சூழலுக்கு ஏற்ப தானே மாற்றியிருக்கும். மாற்றுகின்றது.
ஆனால் அடிப்படையில் ஒரே மூலக்கூறுகள்.
சக்தி அணுக்கள்.
இதன் தோற்றங்களும் வடிவங்களும் வேகங்களும் மட்டுமே வேறுவேரானவை.

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களும் உருவாகும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் எண்ணங்களும் அடிப்படையில் சக்தியே.
நம் அடிப்படை வாழ்வுச் சக்தி
இவ்வாறு வௌ;வேறு பரிமாணங்களை எடுக்கின்றது. சாதாரண அணுவிலிருந்து மாபெரும் சக்திமிக்க
அணுக் குண்டைக்கண்டுபிடிக்கலாம் எனில்
நமக்குள் இருக்கும் ஒன்றுமில்லாததில்
எவ்வளவு சக்தி உள்ளடக்கப்பட்டிருக்கும்.
இதுவரை வெளியை ஆராய்ந்தது போதும்.
இனி நம் உள்ளே கவனிப்போம்.
நம் சக்தியைக் அறிவோம்.

மனிதருக்கும் மிருகங்களுக்கும்
இடையிலான வேறுபாடு
இச் சக்தியைப் பயன்படுத்துவதிலையே உள்ளது.
மிருகம் தன் சக்தியை
அப்படியே எந்தவிதமான கட்டுப்பாடுமின்றி பயமின்றி
இயற்கையாக வெளிப்படுத்தும்.
ஆனால் மனிதர் நாகரிக வாழ்வுக்கா
சில சக்திகளை அடக்குகின்றனர்.
சில சக்திகளை மறைக்கின்றனர்.
முடியாத ஒன்றுக்கு முயல்கின்றனர்.
இத் தவறான வழிமுறையானது
மனிதரை நோயாளியாக்குகின்றது.
ஆனால் இதற்கு மாறாக ஆரோக்கியமான வழியில்
இச் சக்தியை அடக்காமல்; மறுக்காமல் மறைக்காமல்
மாற்றவும் (transform) மனிதருக்கு முடியும்.
ஆனால் இதை அறியாது உள்ளோம்.
இவ்வாறு சக்தியை தன் தேவைக்கு ஏற்ப
மாற்ற (transform) மனிதரால் மட்டுமே முடியும்.
இது தான் நம்மை மிருக நிலையிலிருந்து வேறுபடுத்துகின்றது.

பிரக்ஞை (awareness) இது தான்
நம் சக்தியை மாற்றுவதற்கான வழி. சாவி.
இச் சக்தி நடுநிலையானது.
நமது பிரக்ஞை மூலம் ஆக்கபூர்வமாகவும்
பிரக்ஞையின்மை மூலம் அழிவுக்கும்
இச் சக்தியைப் பயன்படுத்தலாம்.
நம் சக்தியின் பயன்பாடு
நமது கைகளிலையே தங்கியுள்ளது.
ஐன்ஸ்டைனின் பிரக்ஞை
அணுச் சக்தியைக் கண்டுபிடித்தது.
அவரது பிரக்ஞையின்மை
அணு குண்டை உருவாக்கி அழிவுக்கு வித்திட்டது.
இதற்காக இவர் காலங்கடந்து
வருந்தியது உண்டு எனக் கூறுவர்.

நமது நாளாந்த இயந்திரத்தனமான வாழ்வில்
நடுநிலையான நம் வாழ்க்கைச் சக்தியை
ஆக்கபூர்வமான படைப்புச் சக்தியாக
பயன்படுத்துவதற்கு தடை என்ன?
பிரக்ஞையற்ற வாழ்வு.
பிரக்ஞையாக வாழ்வதற்கு பல தடைகள்.
அவை என்ன?
எவ்வாறு அத் தடைகளை அகற்றுவது?
இதற்கு முதலில் நாம்
நமக்கு சக்தியை வழங்கும்
நம் மூச்சைப் பற்றி அறியவேண்டும்.
ஆகவே மூச்சைப் பற்றி அடுத்து
அறிந்து கொள்ள முயற்சிப்போம்
0 Responses

முகப்புத்தக விருப்பு