காதல்: மானுடத்தின் வளர்ச்சிக்கு


காதல்; (love) என்பது கடவுள் தன்மை (godliness) அல்லது
காதல் என்பது உண்மை (truth) என ஓசோ கூறுகின்றார்.
காதல்; கண்டவர் கடவுளை அல்லது உண்மையைக் கண்டவர்
என்பது அவரது அனுபவம்.
இவர் தன் பெரும்பான்மையான சொற்பொழிவுகளில்
மனிதரில்; காதல் உணர்வை வளர்ப்பது எவ்வாறு?
அதன் நன்மைகள் என்ன? காதல் எவ்வளவு உயர்வானது,
என்பது தொடர்பாகவே கூறியுள்ளார். இதற்கு காரணம்,
காதல் இல்லாத ஒரு வாழ்வை
ஒருவரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதளவு கசப்பானது.
காதல் இல்லாத மனிதர் தனித்து (lonely) நிற்பவர்.
இது இவரது தன்முனைப்பு (ego) மட்டுமே.
இவருக்கு மனிதர்களுடன் உறவு இருக்காது.
இவரது வாழ்க்கை இறப்புக்கே வழிகுக்கும்.
ஏனனில் வாழ்க்கை என்பது மனிதர்களுக்கு
இடையிலான உறவில் (interrelated) அமைந்தது.
ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிலும்
(interdependent) தங்கியிருப்பது இயற்கையின் நியதி.
தவிர்க்கப்படமுடியாதது..

காதல்;; இன்மை மிகப்பெரிய வறுமை.
யார் ஒருவர் தன்னில் காதலை வளர்க்கவில்லையோ
அவர் தானே உருவாக்கிய நரகத்தில் வாழ்கின்றார்.
காதல்;; நிறைந்த மனிதர் சொர்க்கத்தில் வாழ்கின்றார்.
அதாவது நரகமும் சொர்க்கமும்
நாம் பார்க்கும் பார்வையின் அடிப்படையில் அமைந்தது.
மாறாக இந்த பூமிக்கு கீழே நரகமோ
மேலே சொர்க்கமோ இல்லை.
இந்த பூமியை சொர்க்கமாகவும் பார்க்கலாம் நரகமாகவும் பார்க்கலாம்.
சக மனிதர்களைக் கடவுளாகவும் பார்க்கலாம் பேய்களாகவும் பார்க்கலாம்.
அனைத்தும் நம் பார்வையிலையே தங்கியுள்ளது.
நம் பார்வை நமது ஆன்மாவின் உயர்வில்,
வளர்ச்சியின் (mature) அடிப்படையில் உள்ளது.

மனித இனம் நோய்யுற்று இருப்பதற்குக் காரணம் காதலின் பற்றாக்குறையே. மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் காதலுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் ஒருவருக்கும் காதலை எவ்வாறு பெறுவது என்றோ அல்லது வழங்குவது என்றோ தெரியாதவர்களாக, முடியாதவர்களாக இருக்கின்றனர்.
காதல் சாத்தியமில்லத ஒன்று அல்ல.
காதல் மிகவும் சாதாரண விடயம்.
காதல் ஒவ்வொருவரிலும் குடிகொண்டிருக்கின்றது.
நம்மில் குடிகொண்டிருக்கும் காதல் வளர்ந்து மலர்வதற்காக காத்திருக்கின்றது.
எவ்வாறு நம் காதலை மலரச் செய்வது?
உடலுக்கு உணவு போல்,
ஆன்மாவுக்குத் தேவை காதல்.
உணவில்லாது உடலால் எவ்வாறு வாழமுடியாதோ அதேபோல்
காதலின்றி ஆன்மாவால் வாழமுடியாது.
உண்மையில் காதல் இன்றி ஒரு ஆன்மா பிறப்பதே இல்லை.
அப்படியிருக்கும் பொழுது காதல் இல்லாத
ஆன்மாவின் வாழ்வைப் பற்றி எப்படிச் சிந்திப்பது?

நம் எல்லோரிலும் காதல் எனும் விதை வாழ்கின்றது.
ஆனால் நாம் அதை வளரவிடுவதில்லை.
இதற்கு காரணம் காதலுக்கு எதிரான
நமது சமூகங்களினதும் சமயங்களினது
சிந்தனைகளும் கட்டுப்பாடுகளும் மட்டுமல்ல
நமது பண்பும் என்பது தவிர்க்கப்பட முடியாதது.
காரணம் நாம் எப்பொழுதும் காதலைத் தேடுகின்றோம்
ஆனால் வழங்குவதற்குத் தயாராக இல்லை.
காதல் வழங்கும் பொழுதே வளர்கின்றது.
யார் ஒருவர் தன்முனைப்பை (ego) கைவிடுகின்றாறோ
அவருக்கு மட்டுமே காதலுக்கான கதவுகள் திறக்கின்றன.
ஒருவருக்காக தன் தன்முனைப்பைக் கைவிடும் பொழுது
காதல் பிறக்கின்றது.
எல்லாவற்றுக்குமாக தன் தன்முனைப்பைக் கைவிடும் பொழுது
தெய்வீகக் காதல் பிறக்கின்றது.
இதுவே மிக உயர்வான காதல் (compassion).
காதல் காமத்தின் மீது கொண்ட விருப்பமல்ல.
இவ்வாறு சிந்தித்து தவறு இழைப்பவர்கள்.
காதலின்றியே வாழ்கின்றனர்.
காதலின் பாதையில் காமம் ஒரு கடவை மட்டுமே.
இது இயற்கையானது.
காதல் ஒரு உயர்ந்த நிலையிக்குச் செல்லும் பொழுது
காமம் மறைந்துவிடுகின்றது.
அதாவது காம சக்தி காதலாக மாறுகின்றது.
காதலின் கீழ்நிலையிலிருக்கும் வடிவம்
காமம் (sex).
காதலின் (love) மிகவும் சுத்தமான
உயர்நிலை வடிவம் அன்பு (compassion).

காமத்தின் அடிப்படையில்
உடல்கள் சேர்கின்றன.
அன்பின் அடிப்படையில்
ஆன்மாக்கள் சந்திக்கின்றன.
அன்பும் (compassion) காமமும் (sex).
கலந்த இடைநிலையானது காதல் (love).

காதலின்போது (love)
எமக்குத் தந்ததமைக்காக மற்றவருக்கு நன்றி கூறுகின்றோம்.
அன்பின்போது (compassion)
நாம் வழங்கியதை மறுக்காமல் பெற்றமைக்காக மற்றவருக்கு நன்றி கூறுகின்றோம். மற்றவர்களுக்கு வழங்குவதற்காக
நாம் பல சக்தியுடன் (energy) இங்கு பிறந்திருக்கின்றோம்.
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக
பல மலர்களுடன் இங்கு வந்திருக்கின்றோம். வாழ்கின்றோம்.

நான் தனித்;து (lonely) இருக்கின்ற ஒரு காரணத்திற்காக
மற்றவரின் உறவை நாடுவது அழகானதல்ல. மற்றவரை பயன்படுத்துவதாகும். மற்றவரும் அதற்காகவே நம்மைப் பயன்படுத்துவார்.
ஆனால் ஒருவரும் தான் பயன்படுத்தப்படுவதை விரும்பமாட்டார்.
இதுவே இன்றைய உறவுகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு
அடிப்படைக் காரணமாக அமைகின்றது என்பதை நாம் அறியாது வாழ்கின்றோம்.
நாம் தனிமையில் (alone) இருப்பதற்கு கற்க வேண்டும்.
நம்மை சகல குறை நிறைகளுடனும் ஏற்றுக்கொள்ள (acceptance) வேண்டும்.
இதுவே நம்மை நாம் காதலிப்பதற்கு வழிவகுக்கின்றது.
தனிமையில் (alone) இன்பமாக இருக்க தெரிந்து கொண்டோமானால்
மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழியைக் கண்டுபிடித்து விடுவோம்.
நாம் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது
பகிர்வதற்கு (to share) வழங்குவதற்கு (to give)
நம்மிடம் ஏதோ உள்ளது.
மகிழ்ச்சியை வழங்குவதற்கு பகிர்வதற்கு நமக்கு தெரியுமானால்
நமக்கு மேலும் மகிழ்ச்சி கிடைக்கும்.
இதுவே ஒருவரை காதலிப்பதற்கான தேவையை உருவாக்கின்றது.
இது மட்டுமின்றி மற்றவரையும் அவருடைய குறை நிறைகளுடன்
அவரை அவராக ஏற்றுக்கொள்ளவும் வைக்கின்றது.
ஆனால் நாம் மற்றவர்கள் நம்மைக் காதல் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
இது குழந்தைத் தனமானது.
வளர்ந்த (mature) மனிதர் மற்றவர்களின் தேவையைப் புரிந்து கொள்பவர்.
ஆகவே நம்மை நாம் காதல் செய்யப் பழகுவோம்.
நம் காதலை வளர்த்தும் பெருக்குவோம்.
நம் காதல் பூத்து மலரும் பொழுது பிறருடன் பகிர்ந்து வழங்கி மகிழ்வோம்.
இதற்கு முதல் அடிப்படை தியானம்.
இதுவே நம்மில் நமக்கு அன்பை ஊட்டி வளர்க்கும்.

காதல் ஒரு கவிதை
கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டது
காதல் இயற்கையான ஒரு சமயம்.

காதலில் விழுவோம்
காதலில் எழுவோம்
காதலில் உயர்வோம்
காதலில் பறப்போம்

காதல் என்பது ஓசோவின் சொற்பொழிவுகளில் மூச்சைப்போல் இரத்த ஓட்டம் போல் இருந்து கொண்டே இருக்கும். காதலில் சகல பரிமாணங்களையும் இவர் ஆராய்ந்து நமக்கு வழிகாட்டியுள்ளார்
0 Responses

முகப்புத்தக விருப்பு