புதிய வாழ்க்கை முறையை நோக்கிய பயணிப்போம்


ஆறு மணித்தியலாம் வேலை
ஆறு மணித்தியலாம் நித்திரை
ஆறு மணித்தியலாம் தயாரிப்புகள்
ஆறு மணித்தியாலம் ஆடல் பாடல் கொண்டாட்டம்

வைத்தியர் நோய் வரும் முன் காப்பாற்றவேண்டும்.
அதற்கே அவருக்கு ஊதியம் வழங்கவேண்டும்.
வந்த நோயை குணப்படுத்துவதற்கல்ல.
நோய் மனிதர்;களுக்கு வருகின்றது எனில்
மனிதர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழிகாட்டப்படவில்லை.

வாழ்க்கையை நாம் வாழ்கின்றோமா?
இது நாம் ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய முக்கியமான ஒரு கேள்வி.
இதற்கு வாழ்க்கை என்பது என்ன என்று தெரிந்திருக்கவேண்டும்.
நாம் செய்யும் ஒவ்வொன்றையும் முழுமையாகவும் ஆனந்தமாகவும்
செய்யும் பொழுது வாழ்க்கை முழுமையடைகின்றது.
எவ்வளவு காலம் வாழ்கின்றோம் என்பது முக்கியமல்ல
எப்படி வாழ்கின்றோம்; என்பதே முக்கியமானது.

காலை எழும் பொழுது நம் முகத்தை பார்ப்பதற்கு
நமக்கே விருப்பம் இருக்காது.
ஏன்?
இன்னும் சிறிது நித்திரை கொள்ள வேண்டும் என்ற அவா?
கடைசி நிமிடம் வரை நித்திரை கொண்டு அவசர அவசரமாக எழும்பி இயந்திரமாக
அனைத்து வேலைகளையும் செய்து காலை உணவை உண்பதல்ல என்னவென்றே தெரியாமல் வயிற்றில் அடைவது அல்லது வேலைக்கும் போகும் வழியில் அடைவது. பிற குடும்ப உறவுகளுடன் எரிச்சலடைவது அவர்களும் தங்களது எரிச்சலை கொட்டுவது. எரிச்சல்கள் அதிகமாகி ஒரு காலைச் சண்டை..
வீட்டில்
நாட்டில்?

வேலைக்கு ஏன் அவசரம்
செய்யும் வேலையில் விருப்பமா?
அல்லது கடமை உணர்வா?
ஓன்றும் இல்லை.
குறிப்பிட்ட நேரத்திற்கு நிற்காவிட்டால்
சம்பளம் வெட்டுப்படும்.
பணத்தைக் காப்பாற்ற நம்மை மறந்து ஒடுகின்றோம்.
வேலையில் முழுமையாக ஈடுபடுகின்றோமா? இல்லை
திங்கட் கிழமை ஏன் வருகின்றது என
ஞாயிறு மாலை எரிச்சலடைவோம்.
திங்கள் வந்தவுடன் வெள்ளிக்கிழமை எப்பொழுது வரும் என ஏங்குவோம்.
எதிர்கால கனவே நிகழ்கால வாழ்க்கையாகின்றது.
நிகழ்காலம் இதனால் மறக்கப்பட்டுவிடுகின்றது
ஆகவே வாழ்க்கை வாழாமல் விடப்படுகின்றது.
எப்பொழுதும் வாழ்க்கை இக் கணமே.
என்பது நம் பிரக்ஞையற்ற மனதிற்குப் புரிவதில்லை.

எதிலும் ஈடுபாடு இல்லாமல்
இயந்திரமாக அலுப்புடன் வாழ்கின்றோம்.
ஏன்?
நம் வாழ்க்கையை நாம் தீர்மானிப்பதில்லை.
ஒருவர் பிறந்தவுடன்
அவரது முழுச் சுதந்திரத்தையும்
பெற்றோர் எடுத்துக்கொள்கின்றனர்.
அவர்களே ஒவ்வொன்றையும் தீர்மானிக்கின்றனர்.
இதன் பின் சமய நிறுவனங்களும்
பாடசாலைகளும் வழிநடத்துகின்றன.
நாம் எதைப் பின்பற்ற வேண்டும்
எப்படி வாழ வேண்டும் என்ன படிக்கவேண்டும்
என்பதைத் தீர்மானிக்கினறன.
படித்தவுடன் வேலை திருமணம் குடும்பம் குழந்தை என
வாழ்க்கைச் சக்கரம் மீண்டும் மீண்டும்
ஒரேமாதிரி உருண்டோடுகின்றது.
.
இதில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும்
ஒருவரின் விருப்பு வெறுப்புகள் திறமைகள் ஆளுமைகள் ஆற்றல்கள் பலம் பலவீனங்கள் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை.
இதன் விளைவுகள் தனிநபருடன் மட்டும் நின்றுவிடுவதில்லை.
இதற்கு தொடர்ச்சி ஒன்று இருந்து கொண்டே இருக்கும்.
இதனால் நம் மனதில் ஏற்படும் பாதிப்புகள் பிற மனிதரையும் பாதிக்கும்.
இதனால் தான் பொதுவான உலக வாழ்க்கை
எல்லா நாடுகளிலும் ஓரே மாதிரி இருக்கின்றது.
எல்லோரும் திருப்தியின்றியே வாழ்கின்றனர்.
இதற்கு அடிப்படையாக ஒரு காரணம்
எங்கோ இருக்கவேண்டும். இதைக் கண்டுபிடித்து
இந்த நிலையை மாற்றி நாம் விரும்பியபடி வாழ்வதற்கு
நாம் தான் முயற்சிக்கவேண்டும்.
முதல் படி எடுத்துவைக்கவேண்டும்.
ஆனால் முதல் படி எடுத்துவைப்பதில்
எல்லோருக்கும் ஒரு தயக்கம் இருக்கின்றது.
காரணம் பொறுப்பு (responsibility).
ஒருவருக்கும் பொறுப்பு எடுப்பதற்கு விருப்பமில்லை.
ஆனால் அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும்.
சுதந்திரமும் பொறுப்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்பதை ஏற்றுக்கொள்வதற்கோ புரிந்துகொள்வதற்கோ
நாம் தயார் இல்லை.

ஒவ்வொரு கணத்தையும் ஆனந்தமாகவும்
முழுமையாகவும் வாழ்வோமானால்
அடுத்த கணமும் அவ்வாறே அமையும்.
ஏனனில் இக் கணத்தின் தொடர்ச்சியே அடுத்த கணம்.
இவ்வாறு வாழ்ந்தோமானால்
எதிர்காலத்தை பற்றிக் கனவு மட்டும் காணமல்
எதிர்காலம் நிகழ்காலமாக வரும் ஒவ்வொரு கணமும்
வாழ்க்கையை அனுபவிக்கலாம் ஆனந்தமாக.

ஒரு மனிதருடன் காதலாகவும் அன்பாகவும் இருக்கும் பொழுது
மகிழ்ச்சி பிறக்கின்றது எனில்
இவ்வாறு ஒவ்வொரு மனிதருடனும்
காதலாகவும் அன்பாகவும் இருக்கும் பொழுது
அனைவரும் ஆனந்தமாக இருக்கலாம்.
ஆடுவதும் பாடுவதும் சிரிப்பதும்; என
வாழ்க்கை ஒரு கொண்டாட்டமாக மாறும்.
0 Responses

முகப்புத்தக விருப்பு