பாரதி கவிதைகள்


1.வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்
கானில் வளரும் மரமெலாம் நான்
காற்றுப் புனலும் கடலுமே நான்.

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்
வாரியி னுள்ளே உயிரெலாம் நான்.

கம்பனி சைத்த கவியெலாம் நான்
காருநர் தீட்டும் உருவெலாம் நான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்.

இன்னிசை மாத ரிசையுளேன் நான்
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்
பொயையிருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரக் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினான் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
கண்டபல சக்திக் கணமெலாம் நான்
காரண மாகிக்க கதித்துனோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆன பொருட்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதியே நான்.








2.இவ்வுலகம் இனியது;
இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது;
தீ இனிது;
நீர் இனிது;
நிலம் இனிது;
ஞாயிறு நன்று;
திங்களும் நன்று;
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன;
மழை இனிது;
மலை இனிது;
காடு இனிது;
ஆறுகள் இனியன;
உலோகமும், மரமும், செடியும், கொடியும்,
மலரும், காயும், கனியும் இனியன;
பறவைகள் இனியன;
ஊர்வனவும் நல்லன;
விலங்குகளெல்லாம் இனியவை;
நீர் வாழ்வனவும் நல்லன;
மனிதர் மிகவும் இனியர்;
ஆண் நன்று;
பெண் இனிது;
குழந்தை இன்பம்;
இளமை இனிது;
முதுமை நன்று;
உயிர் நன்று;
சாதல் இனிது.















3.விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டியபடி செலும் உடல்கேட்டேன்;
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்;
தசையினைத் தீ சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்;



4.தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ!!



5.பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதரறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையகம்
பேதமை யற்றிடுங் காணீர்.
அசைவறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ





6.எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின் முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்

0 Responses

முகப்புத்தக விருப்பு