மனிதர்களை உங்கள் செல்வாக்குக்கு உரியவராக மாற்றும் கலை


நாம் செய்ய விரும்புவதை மற்றவர்கள் செய்ய வேண்டுமெனில், முதலில் அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நான் கண்டறிய வேண்டும். அவர்கள் எதற்குக் கட்டுப்படுபவர்கள் என்பதை அறிந்தால், அவர்களை கட்டுப்படுத்துவதும் சுலபமாகி விடும்.
நாம் ஒவொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள், வெவ்வேறு பொருட்களை விரும்புகின்றவர்கள். ஒவ்வொன்றிற்கும் வேறு வேறு அளவு முக்கியத்துவம் தருபவர்கள். எனவே மற்றவர்களும், நாம் நினைப் பதையே, விரும்புவதையே, நினைப்பார்கள், விரும்பு வார்கள் என்று கற்பனை செய்து தவறு செய்து விடாதீர் கள். முதலில் அவர்கள் எதைத் தேடிக் கொண்டுள்ளனர், என்ன விரும்புகின்றனர் என்பதை அறியவும்.

நீங்கள் அவர்கள் என்ன கேட்க விரும்புகிறார்கள் என்பதைப் பேசினால் அவர்களை உங்கள் விருப்பப்படி இயக்கலாம்.

நீங்கள் அவர்கள் விரும்புவதை எவ்வாறு பெறலாம் என்பதை, அவர்களின் விருப்பத்தை நீங்களும் விரும்புவதாகக் காட்டி அவர்களைச் செய்ய வைக்கலாம்.
இது மற்றவர்களின் மீது செல்வாக்குச் செலுத்த சிறந்த வழியாகும். சரியான இலக்கை உங்களது பேச்சால் அடைய, முதலில் இலக்கு எது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

உதாரணமாக நீங்கள் உங்களின் தொழிற்சாலையில் பணிபுரிய ஒரு சிறந்த பொறியாளரைப் பார்த்துப் பேசுவதாக இருந்தால், அந்தப் பொறியாளருக்கு ஏற்கனவே, பல தொழிற்சாலைகள் அழைப்பு விடுத்திருந்தால் அதில் உங்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் எனப் பார்ப்போம்.
இங்கு நீங்கள் முதலில் அறிய வேண்டியது, எந்த வகையான பணியை, சம்பளத்தை, தொழிற்சாலையை அவர் விரும்கின்றார் என்பதாகும். அவர் முன் பணம் பெறும் வசதியை விரும்புகின்றார் என்றால், அதைப்பற்றி நீங்கள் பேச வேண்டும். அவர் எவ்வளவு எதிர்பார்க் கின்றார். நீங்கள் எவ்வளவு கொடுக்க முடியும் என்பதுதான் உங்களின் உரை யாடலாக இருக்க வேண்டும்.

அவர் பணி உத்தரவாதம் குறித்து அதிகக் கவனம் செலுத்துபவராக இருந்தால், நீங்கள் உத்தரவாதம் குறித்துப் பேச வேண்டும். அவர் தொடர்ந்து பகுதி நேரமாகப் படிக்க விரும்புகின்றார் என்றால் அதைப்பற்றிப் பேசவும்.

இதன் சுருக்கம் அவர் என்ன விரும்பு கிறார் என்பதை அறிந்து அவர் விரும்பு வதை அடைய, நீங்கள் விரும்பு வதை உங்களிடம் பணியாற்றும் அவர் செய்ய வேண்டும் என்பதை தெரிவிப்பதுதான்.

இதுவே நீங்கள் வேலை தேடி ஒரு தொழிற்சாலைக்கு செல்வதாக இருந்தால், நீங்கள் அங்கு என்ன பணிகள் உள்ளன, அதன் பொறுப்புகள், கடமைகள் என்ன என்பதை முதலில் அறிந்து, அதற்கு ஏற்ப அதனை நீங்கள் எவ்வாறு சிறப்பாகச் செய்ய முடியும் என்பதைத் தெரிவிக்க வேண்டும். உதாரணமாக அவர்களின் வாடிக்கையாளர்களைத் தொலைபேசி மூலம் கையாள வேண்டி இருப்பின், அதை உங்களால் செய்ய முடியும், அதற்கான அனுபவம் உண்டு என்பதைத் தெரிவிக்க வேண்டும். எனவே அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பதை அறிந்து அவர்கள் மொழியில் பேச வேண்டும்.

எதிரில் பேசுகின்றவர்கள் என்ன விரும்புகின்றனர் என்பதை அவர்களைக் கேட்பதன் மூலமாகவும், அவர் பேச்சைக் கவனிப்பதன் மூலமாகவும், அவர்களின் அசைவுகளைப் பார்ப்பதன் மூலமாகவும் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இதற்கு எடுக்கும் முயற்சி மிக முக்கியமானதாகும்.
0 Responses

முகப்புத்தக விருப்பு