1.தன்னை ஒரு அறிவாளி என்று நினைப்பவனே ஒரு பெரிய
முட்டாள்!
-வால்டேர்
2.ஒரளவு முட்டாள்கள், ஒரளவு புத்திசாலிகள் ஆகியவர்களிடமே, மிகப்பெரிய
ஆபத்து இருக்கிறது.
-ஜெக்கே
3"கற்பனைசெய்தல் மிக முக்கியமானது அறிவைக்காட்டிலும்."
விஞ்ஞானத்தந்தை: Albert Einstein
4.ஒரு உண்மையான நண்பன் வாழ்வின் நல்மருந்து.- பைபில்
5.கண்கள், தம்மைத் தாமே நம்புகின்றன. காதுகளோமற்றவரை நம்புகின்றன.
-ஜெர்மன் பழமொழி
6.எந்த ஆர்வக்குறைச்சலுமின்றி
ஒரு தோல்வியிலுருந்து
இன்னொன்றிற்காகப் போகும் திறமையே வெற்றியாகும்.
7.குடும்பம் எனப்படுவது, இயற்கையின் அற்புதப்
படைப்புகளில் ஒன்று.
-ஜார்ஜ் சாந்தாயனா
8.மற்றவர்களுக்கு எது கஷ்டமாக இருக்கிறதோ, அதை எளிதாகச் செய்வது
அறிவு. அந்த அறிவுக்கு எது முடியாததாக உள்ளதோ, அதைச் செய்து முடிப்பதே
பேரறிவு.-ஏமியல்
9.மனமாரக் காதலிக்கும் பெண்களுக்கு முன்னே
எந்த ஒரு ஆணும் குழந்தையாகி விடுவான்!
–தாகூர்
10.எவன் பெருமையடித்தானோ அவனை இறைவன் தாழ்வடையச் செய்வான்,
எவன்பணிவாக இருக்கிறானோ அவனை இறைவன் உயர்த்துவான்.
- முஹம்மது நபி