இதயம் கொடு என வரம் கேட்டேன்


முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டில் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்து சென்று விட்டாள்
ஓஹோ முழுமதி…

கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவில் வேடிக்கை பார்க்கிறதே
ஓஹோ முழுமதி….

அமைதியுடன் அவள் வந்தாள்
விரல்களை நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தே அவளும் இல்லை கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்
தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே திரை ஒன்று தெரிந்தது
எதிரினிலே முகமுடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா
ஓஹோ முழுமதி
0 Responses

முகப்புத்தக விருப்பு